Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ENG vs SA: 272 பந்துகளில் முடிவடைந்த முதல் ஒருநாள் போட்டி.. 23 பந்துகளில் மார்க்கரம் அரைசதம்- இங்கிலாந்து படுதோல்வி

லீட்ஸ்: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி லீட்ஸ் நகரில் தொடங்கியது. இதில் டாஸ் பண்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கட், ஐந்து ரன்களில் ஆட்டமிழக்க, ஜோ ரூட் 14 ரன்களிலும், ஹாரி புரூக் 12 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். தொடக்க வீரர் ஜெமி ஸ்மித் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 48 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார்.

South africa Thrashes England

அதன் பின் களம் இறங்கிய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் 12 ரன்களுக்கு மூன்று விக்கெட் இழந்த இங்கிலாந்து அணி, 131 ரன்கள் எடுத்திருந்தபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணி வெறும் 24.3 ஓவரில் மட்டும்தான் பேட்டிங் செய்தது.

தென்னாப்பிரிக்கா பந்து வீச்சின் கேசவ் மகராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்லை தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர் மார்க்கரம் மற்றும் ரியான் ரிக்கல்டன் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். இதில் ஏய்டன் மார்க்கரம் 23 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர், 55 பந்துகளின் 86 ரன்கள் சேர்த்தார்.

இதில் 13 பவுண்டரிகளும், இரண்டு சிக்சர்களும் அடங்கும். மறுமுனையில் ரிக்கல்டன் 59 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். கேப்டன் டெம்பா பவுமா 6 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் டக் அவுட்டாகியும் வெளியேறினர். கடைசி பந்தில் சிஎஸ்கே வீரர் பிரவீஸ் சிக்ஸர் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி 20 புள்ளி 5 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த போட்டி மொத்தமாகவே இரண்டு இன்னிங்ஸும் சேர்த்து 272 பந்துகள் மட்டுமே நீடித்தது. இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் மோசமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இங்கிலாந்து அணியின் இந்த மோசமான பேட்டிங்கிற்கு தி ஹென்டரட் தொடரில் தொடர்ந்து விளையாடுவதே காரணம் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய இங்கிலாந்து அணியின் சோனி பேக்கர் 7 ஓவர்களில் 76 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் அறிமுக போட்டியில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த இங்கிலாந்து வீரர் என்ற சோகமான சாதனையை அவர் படைத்தார்.

Story first published: Wednesday, September 3, 2025, 7:00 [IST]
Other articles published on Sep 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+