Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென்னாப்பிரிக்க கேப்டனுக்கு என்ன ஆச்சு.. வங்கதேச சிங்க குட்டி களத்தில் குதிச்சிருச்சி..டாசில் காமெடி

மும்பை : ஐசிசி உலகக் கோப்பையில் 23-வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியும் வங்கதேச அணியும் இன்று பலப் பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக மார்க்கரம் இன்றும் களம் இறங்கினார்.

கேப்டன் பவுமா காயத்தில் இருந்து குணமடைந்து விட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அவருக்கு வாய்ப்பு தராமல் இன்றும் ஏய்டன் மார்க்கரம் கேப்டனாக வந்திருக்கிறார்.

South africa vs Bangladesh toss - Huge changes in playing xi as Aiden markram comical decision

இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணியில் மீண்டும் பெவுமாவுக்கு எதிராக வீரர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதேபோன்று வங்கதேச அணியின் கேப்டன் ஷகிபுல் அசன் முழு உடல் தகுதியை எட்டியதால் தற்போது தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கேப்டனாக களம் இறங்கியுள்ளார். இந்த நிலையில் டாஸ் வென்ற கேப்டன் ஏய்டன் மார்க்கரம், முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இது குறித்து பேசிய அவர் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால் எங்களால் பீல்டிங் செய்ய முடியாது.

இதனால் பேட்டிங்கை முதலில் தேர்வு செய்து விட்டு வெயில் சென்றவுடன் பீல்டிங் செய்யலாம் என முடிவெடுத்திருப்பதாக கிண்டலாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர் இங்கிலாந்துக்கு எதிராக நாங்கள் எப்படி அதிரடியாக விளையாடினோமோ அதே போல் ஒரு ஆட்டத்தை தான் இன்றும் நாங்கள் வெளிப்படுத்த போகிறோம். இங்குள்ள வெயில் வீரர்கள் இடையே சோர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் எந்த அணியும் யாரை வேண்டுமானாலும் வீழ்த்த முடியும் என்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

நெதர்லாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததில் நிறைய பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். இது புதிய நாள். நாங்கள் இங்கிலாந்துக்கு எதிராக எப்படி விளையாடினோமோ அதே போல் ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வோம்.இன்றைய ஆட்டத்தில் லுங்கி நெகிடி காயம் காரணமாக விளையாடவில்லை.

அவருக்கு பதிலாக லிசாத் களமிறங்கியுள்ளார். இதை தொடர்ந்து பேசிய வங்கதேச அணி கேப்டன் ஷகிபுல் ஹசன், உடல் தகுதியை எட்டி விட்டேன். இது எங்களுக்கு மிகவும் முக்கியமான போட்டி, இந்த போட்டியில் நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி தென்னாப்பிரிக்காவை வீழ்த்துவோம் என நம்புகிறேன். நாங்கள் முதலில் பந்து வீசுவது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. நாங்கள் தென்னாப்பிரிக்காவை சராசரியான இலக்கில் சுருட்டினால் அதை எங்களால் சேசிங் செய்ய முடியும் என்று ஷகிபுல் ஹசன் கூறினார்.

Story first published: Tuesday, October 24, 2023, 14:28 [IST]
Other articles published on Oct 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+