For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் டெஸ்ட்: மிக வலுவான நிலையில் இந்தியா! தெ.ஆ. வெல்ல இலக்கு 458 ரன்கள்!!

By Mathi

ஜோகன்னஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 421 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தது. முதல் இன்னின்சில் இந்தியா 36 ரன்கள் முன்னிலை வகித்தால் 458 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு தென்னாப்பிரிக்கா அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 280 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்கா 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்தியாவின் ஜாகீர்கானும், இஷாந்த் ஷர்மாவும் இணைந்து தென்னாப்பிரிக்காவின் எஞ்சிய 4 விக்கெட்டுகளை வெறும் 45 நிமிடங்களுக்குள் சாய்த்தனர்.

244 ரன்களில் ஆல் அவுட்

244 ரன்களில் ஆல் அவுட்

இதனால் தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 244 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 36 ரன்கள் முன்னிலை பெற்றது.

சொதப்பிய இந்தியா

சொதப்பிய இந்தியா

அடுத்து 36 ரன்கள் முன்னிலையுடன் இந்தியாவின் இன்னிங்சை முரளிவிஜயும், ஷிகர் தவானும் ஆரம்பித்தனர். மீண்டும் சொதப்பிய தவான் 15 ரன்களில் அவுட் ஆனார்.

விஜய் 39 ரன்கள்

விஜய் 39 ரன்கள்

அடுத்து விஜயுடன் புஜாரா இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினர். 94 பந்துகளை சந்தித்து 39 ரன்கள் சேகரித்த விஜய், காலிசின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டிவில்லியர்சிடம் கேட்ச் ஆனார்.

நிலைத்த புஜரா- கோஹ்லி

நிலைத்த புஜரா- கோஹ்லி

இதைத் தொடர்ந்து புஜா£ராவும், கோஹ்லியும் 3-வது விக்கெட்டுக்கு கைகோர்த்தனர். இந்த ஜோடி ரன் குவிப்பில் வேகம் காட்டினர்.

புஜாரா சதம்

புஜாரா சதம்

அபாரமாக ஆடிய புஜாரா பவுண்டரி விளாசி தனது 6-வது சதத்தை பூர்த்தி செய்தார். வெளிநாட்டு மண்ணில் இது அவரது முதல் சதமாகும். தென்னாப்பிரிக்க மண்ணில் சதம் அடித்த 9-வது இந்தியர் புஜாரா ஆவார்.

246 ரன்கள்

246 ரன்கள்

இதற்கிடையே கோஹ்லி அரைசதத்தை கடந்தார். 66 ஓவர்கள் முடிந்திருந்த போது இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி 282 ரன்கள் முன்னிலை கண்டு வலுவான நிலையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

421 ரன்கள் குவித்து அவுட்

421 ரன்கள் குவித்து அவுட்

4வது நாளான இன்று இந்திய அணியின் ஆட்டம் அற்புதமாக இருந்தது நிலைத்து ஆடிய இந்திய அணி 421 ரன்கள் குவித்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

வெல்ல 458 இலக்கு

வெல்ல 458 இலக்கு

இந்திய அணி ஏற்கெனவே முதல் இன்னிங்சில் 36 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. இதனால் தென்னாப்பிரிக்கா அணி வெல்ல 458 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Story first published: Saturday, December 21, 2013, 18:21 [IST]
Other articles published on Dec 21, 2013
English summary
India's No 3 batsman, Cheteshwar Pujara slammed his sixth Test ton, his first away from home on the third day of the first Test against South Africa at Johannesburg.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+