Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவங்களுக்கு தண்ணீர்ல கண்டம்.. தென்னாப்பிரிக்காவுக்கு ஆப்பு வைத்த மழை.. பறிப்போனது ஒரு புள்ளி

ஹாபர்ட : டி20 உலககோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க அணி வெற்றிக்கு அருகில் வந்த நிலையில் , ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

ஹாபர்ட் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆட்டம் 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

தடுமாற்றம்

தடுமாற்றம்

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் முன்வரிசை வீரர்கள், தென்னாப்பிரிக்க பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ரெஜிஸ் சக்பவா 8 ரன்களிலும், கிரைக் எர்வின் 2 ரன்களிலும் ஆட்டமிழக்க சென் வில்லியம்ஸ் 1 ரன்னில் வெளியேறினார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இந்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் டக் வொர்த் லூயிஸ் விதிப்படி 7 ஓவர் முடிவில் 64 ரன்கள் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மழை மீண்டும் குறுக்கீடும் என்பதால் தென்னாப்பிரிக்க வீரர்கள் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக பெவுமா வெறும் 2 பந்தில் 2 ரன்கள் மட்டுமே அடிக்க, மற்ற பந்துகளை எல்லாம் குயின்டன் டி காக் மட்டுமே பிடித்தார்.

குயின்டன் டி காக் அதிரடி

குயின்டன் டி காக் அதிரடி

ஆக்கோரஷமாக குயின்டன் டி காக் விளையாடி 8 பவுண்டரிகள், ஒரு சிக்சர் விளாசி 18 பந்தில் 47 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் 3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்தது. அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடை செய்யப்பட்டது. இந்த நிலையில், 5 ஓவர்கள் வருவதற்குள் ஆட்டம் தடைப்பட்டதால், டேக் வொர்த் லுயிஸ் விதியை அமல்படுத்த முடியாமல் போனது.

ஆட்டம் கைவிடப்பட்டது

ஆட்டம் கைவிடப்பட்டது

இதனால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி மட்டுமே கிடைத்துள்ளது. இது தென்னாப்பிரிக்க அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. வெற்றி பெற வேண்டிய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் 1 புள்ளியும், கிடைக்க வேண்டிய ரன் ரேட்டும் பறிப்போனது. தென்னாப்பிரிக்கா அணிக்கு உலககோப்பையில் தொடர்ந்து மழையால் இது போன்ற துரதிர்ஷ்டம் நிகழ்கிறது.

Story first published: Monday, October 24, 2022, 21:45 [IST]
Other articles published on Oct 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+