Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியாயம் வேணாமா.. பயிற்சியில் சேட்டையை கொடுத்த தென்னாப்பிரிக்கா.. யார் பவுலிங் போட்டுருக்கானு பாருங்க

திருவனந்தபுரம்: நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி சார்பாக விக்கெட் கீப்பர் ஹென்ரிக் கிளாசன் பந்துவீசிய சம்பவம் ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சாதாரணமாக பயிற்சி போட்டிகளுக்கு எந்த பயிற்சி பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். வீரர்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளதோடு, பந்துவீச்சாளர்களை புத்துணர்ச்சியுடன் வைக்க அனைத்து அணிகளும் முடிவு எடுத்து செயல்படும்.

South Africa wicket keeper Heinrich Klassen bowling video is trending in Social Media

அதனால் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களும் சில ஓவர்களை வீசி பயிற்சி மேற்கொள்வார்கள். அந்த வகையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா சொந்த காரணங்களுக்காக வீடு திரும்பியுள்ளதால், மார்க்ரம் கேப்டனாக செயல்பட்டார்.

இதனையடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. அப்போது முதல் விக்கெட் 24 ரன்களில் வீழ்த்தப்பட்ட நிலையில், இரண்டாவது விக்கெட்டுக்கு கான்வே - வில்லியம்சன் இணை சேர்ந்து ரன்கள் சேர்த்தது. இதன்பின் தென்னாப்பிரிக்கா பவுலர்கள் பயிற்சியளிக்கும் வகையில், அனைவரின் கைகளிலும் பந்தை கொடுத்தார் கேப்டன் மார்க்ரம்.

South Africa wicket keeper Heinrich Klassen bowling video is trending in Social Media

ஒரு கட்டத்தில் விக்கெட் கீப்பரான ஹென்ரிக் கிளாசன் கைகளில் பந்தை கொடுக்க, ரசிகர்களிடையே உற்சாகம் எழுந்தது. அப்போது கான்வேவின் தலையை கடந்து பந்தை வீசிய கிளாசனின் பந்து பவுண்டரியை எல்லையை கடந்தது. சுழற்பந்தை வீசிய கிளாசன் அந்த பந்தை நடுவர் நோ-பாலாக அறிவித்தார். இது ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

பயிற்சி போட்டிகளில் பயிற்சிக்காக அத்தனை வீரர்களும் விளையாடுவது இயல்பு என்றாலும், விக்கெட் கீப்பருக்கு பவுலிங் பயிற்சி கொடுத்து தென்னாப்பிரிக்கா அணி சேட்டை செய்ததாக ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அதேபோல் கிளாசன் பவுலிங் செய்த வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.

Story first published: Monday, October 2, 2023, 22:45 [IST]
Other articles published on Oct 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+