Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடர்ல வெற்றி கொண்டதுக்கு அப்புறமும் விட்டுக்கொடுக்காத ஆட்டம்... சிறப்பான தென்னாப்பிரிக்க மகளிர்...

லக்னோ : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க மகளிருக்கிடையில் 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நடந்து முடிந்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்க மகளிர் 5 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் 4க்கு 1 என்ற கண்க்கில் தொடரை கைப்பற்றியுள்ளனர்.

4வது போட்டியில் வெற்றி கொண்டு தொடரை கைப்பற்றிய நிலையிலும் இன்றைய போட்டியில் அவர்கள் விட்டுக் கொடுக்காமல் விளையாடினர். ஆயினும் இந்திய பௌலர் ராஜேஸ்வரியின் பௌலிங் இன்றைய போட்டியில் சிறப்பாக இருந்தது.

தொடரை கைப்பற்றிய தென்னாப்பிரிக்கா

தொடரை கைப்பற்றிய தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்க மகளிர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய மகளிருடன் மோதினர். இந்த தொடரில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 4 போட்டிகளை வெற்றி கொண்டு தொடரை கைப்பற்றியுள்ளது. இந்திய மகளிர் ஒரு போட்டியில் வெற்றி கொண்டுள்ளனர்.

ஒரு போட்டியில் வெற்றி

ஒரு போட்டியில் வெற்றி

மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் இந்த தொடரில் பங்கேற்றனர். கொரோனா காரணமாக சரியான பயிற்சியில்லாத நிலையிலும் இந்த தொடரில் இந்திய மகளிர் சிறப்பாக விளையாடினர். ஆயினும் தென்னாப்பிரிக்க மகளிருடன் ஈடுகொடுக்க முடியாமல் இந்திய மகளிர் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி கொண்டுள்ளனர்.

விட்டுக் கொடுக்காத தென்னாப்பிரிக்கா

விட்டுக் கொடுக்காத தென்னாப்பிரிக்கா

கடந்த போட்டியில் விளையாடியதன்மூலமாக 3க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது தென்னாப்பிரிக்க மகளிர் அணி. ஆயினும் இன்று லக்னோவில் நடைபெற்ற 5வது போட்டியிலும் விட்டுக் கொடுக்காமல் விளையாடி தொடரை 4க்கு 1 என்ற கணக்கில் சிறப்பாக கைகொண்டுள்ளனர்.

அதிரடி தென்னாப்பிரிக்க மகளிர்

அதிரடி தென்னாப்பிரிக்க மகளிர்

இன்றைய 5வது போட்டி லக்னோவில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்களை குவித்தது. ஆயினும் தொடர்ந்து சேசிங்கில் ஈடுபட்ட தென்னாப்பிரிக்க மகளிர் அணி 10 பந்துகள் மீதமிருந்த நிலையில் 189 ரன்களை அடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றனர்.

ராஜேஸ்வரி அதிரடி பௌலிங்

ராஜேஸ்வரி அதிரடி பௌலிங்

போட்டியில் இந்தியாவின் மிதாலி ராஜ் அவுட்டாகாமல் 79 ரன்களை குவித்தார். கடந்த போட்டியில் அவர் சர்வதேச போட்டிகளில் 10,000 ரன்கள் சாதனையை எட்டியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பௌலிங்கில் ராஜேஸ்வரி கெய்க்வாட் 10 ஓவர்களில் 13 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆயினும் இவர்களது சிறப்பான ஆட்டம் கானல் நீரானது.

Story first published: Wednesday, March 17, 2021, 17:56 [IST]
Other articles published on Mar 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+