490 ரன்கள், 151 பந்துகள், 57 சிக்சர், 27 பவுண்டரிகள்.. எல்லாத்துக்கும் இவரே ஓனர்!
டெல்லி: சென்னை உள்பட, 200 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரி சோதனை நடத்தியது ஒரு சாதனை என்றால், 151 பந்துகளில், 490 ரன்கள், அதில் 57 சிக்சர்கள், 27 பவுண்டரிகள் அடித்ததை எதில் சேர்ப்பது.
தென்னாப்பிரிக்காவில் என்டபிள்யூயு புக்கே என்ற அணிக்கும் போட்ச் டிராப் அணிக்கும் இடையேயான போட்டியில், புக்கே அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 677 ரன்கள் குவித்தது.

இதில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான 20 வயதாகும் ஷேன் டேட்ஸ்வெல், 151 பந்துகளில், 490 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடைய அதிரடியில், 57 சிக்சர்கள், 27 பவுண்டரிகளும் அடங்கும்.
அதே அணியைச் சேர்ந்த ஹாஸ்புரோக் என்ற வீரர், 52 பந்துகளில், 6 சிக்சர்கள், 12 பவுண்டரிகளுடன், 104 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
போட்ச் டிராப் அணி 9 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் மட்டுமே எடுத்து, 387 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
விக்கெட் கீப்பரான டேட்ஸ்வெல், சும்மா பவுலிங்கும் செய்தார். அதில், 7 ஓவர்களில், 32 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
ஒருதினப் போட்டிகளில், தனிநபர் அடித்த அதிகப்பட்ச ரன் என்ற சாதனையை நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சன்ஸ்கிருத் ஸ்ரீராம் புரிந்திருந்தார். 2014ல், திண்டுக்கல் மாவட்ட 16 வயதுக்குட்பட்டோருக்கான பள்ளிகள் இடையேயான போட்டியில், அவர், ஆட்டமிழக்காமல், 486 ரன்கள் அடித்திருந்தார். தற்போது அந்த சாதனையை டேட்ஸ்வெல் முறியடித்துள்ளார்.
Story first published: Monday, November 20, 2017, 18:14 [IST]
Other articles published on Nov 20, 2017


Click it and Unblock the Notifications