For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டேவிட் மில்லர் குழந்தை மரணம்??.. இன்ஸ்டாவில் போட்ட உருக்கமான பதிவு.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!!

ராஞ்சி: தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பால் கிரிக்கெட் உலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் அடுத்தடுத்து அதிரடிகளை காட்டி ரசிகர்களை கவர்ந்து வருபவர் டேவிட் மில்லர் தான்.

டேவிட் மில்லர் பதிவு

டேவிட் மில்லர் பதிவு

இந்நிலையில் இவர் ஒரு சிறு குழந்தை குறித்து மறைவு செய்தி போட்டுள்ள பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 வயது சிறுமியின் புகைப்படங்களை பதிவிட்டு, உன்னை பிரிந்து இனி எப்படி இருக்கப்போகிறேன் எனத் தெரியவில்லை. நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த உள்ளம் நீதான். எப்படிப்பட்ட காலத்தையும் சிரித்துக்கொண்டே சமாளிக்க வேண்டும் என்பதை உன்னிடம் இருந்து கற்றுக்கொண்டுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தது எப்படி?

உயிரிழந்தது எப்படி?

அந்த சிறுமி குழந்தை பருவத்தில் இருந்தே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு உயிரிழந்தார். இதனால் தான் மில்லர், " நீ வாழ்கையை எதிர்த்து சிறப்பாக சண்டையிட்டு இருக்கிறாய், இது உன்னை பார்ப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மில்லரின் குழந்தை

மில்லரின் குழந்தை

இது டேவிட் மில்லரின் குழந்தை தான் என தகவல் வெளியாகி வருகிறது. பல்வேறு ஆங்கில ஊடகங்களிலும் மில்லரின் மகள் தான் உயிரிழந்தார் என குறிப்பிட்டு வருகின்றன. மற்றொரு புறம் இது டேவிட் மில்லரின் தீவிர ரசிகை என்றும், பல்வேறு போட்டிகளை நேரில் காண்பதற்காக மில்லர் ஏற்பாடு செய்வார் என்றும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து மில்லரின் தரப்பில் இருந்து எந்தவித விளக்கமும் தரப்படவில்லை.

 2வது ஒருநாள் போட்டி

2வது ஒருநாள் போட்டி

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் தென்னாப்பிரிக்க அணியின் முதுகெலும்பாக மில்லர் இருந்து வருகிறார். எனவே அவரை இதில் விளையாடுவாரா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Story first published: Sunday, October 9, 2022, 15:04 [IST]
Other articles published on Oct 9, 2022
English summary
South african Star batter David Miller announces shocking news ahead of India vs south africa 2nd ODI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+