Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்வதேச கிரிக்கெட்டிற்கு பேரிழப்பு.. தென்னாப்பிரிக்க வீரர் கிளாசன் எடுத்த உருக்கமான முடிவு

மும்பை: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து தென்னாப்பிரிக்க வீரர் என்று கிளாசன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 33 வயதான இந்து கிளாசன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்தியாவுக்கு எதிராக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

இதுவரை 60 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய கிளாசன் 2141 ரன்களை அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 43 ஆகும். இதே போன்று 58 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி ஆயிரம் ரன்கள் அடித்துள்ள கிளாசன், நான்கு டெஸ்ட் போட்டிகள் விளையாடி வெறும் 104 ரன்கள் மட்டும் தான் அடித்துள்ளார்.

Heinrich Klaasen

உலகம் முழுவதும் நடைபெற்று வரும் டி20 பிரான்சைஸ் தொடரில் முக்கியமான வீரராக கிளாசன் கருதப்படுகிறார். அண்மையில் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி இவரை 23 கோடி கொடுத்து தக்க வைத்தது. 14 போட்டியில் விளையாடிய கிளாசன் 481 ரன்கள் குவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் தனது ஓய்வு முடிவு குறித்து கிளாசன், சமூக வலைத்தளத்தில் உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், இது எனக்கு உண்மையிலேயே சோகமான நாள். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறுவதாக முடிவு எடுத்து இருக்கின்றேன்.

இந்த முடிவு எடுக்க எனக்கு நீண்ட கால அவகாசம் தேவைப்பட்டது. ஏனென்றால் என் குடும்பத்திற்காக இந்த முடிவு எடுத்துள்ளேன். என் குடும்பத்திற்கு எது சிறந்ததோ, அதற்காக இந்த முடிவை நான் எடுத்துள்ளேன். நிச்சயமாக நான் எடுத்ததிலே மிகவும் கடினமான முடிவு இதுதான்.

முதல் நாளிலிருந்து என்னுடைய நாட்டுக்காக விளையாடுவது என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக நான் நினைக்கின்றேன். இந்த ஒரு தருணத்திற்காக தான் நான் சிறு வயதில் இருந்து கடுமையாக உழைத்து கனவு கண்டேன். இந்த பயணத்தின் நான் பல நல்ல நண்பர்களையும்,உறவுகளையும் சம்பாதித்து இருக்கின்றேன்.

அதை வாழ்நாள் முழுவதும் நான் விலை உயர்ந்ததாக கருதி பாதுகாப்பேன். தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடும் போது பல சிறந்த நபர்களை சந்தித்தேன். அது என் வாழ்க்கையே மாற்றி இருக்கின்றது. அவர்களுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. என் மீது நம்பிக்கை வைத்த பல பயிற்சியாளர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

என் வாழ்நாளில் நான் எப்போதும் தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆதரவாக தான் இருப்பேன். இனி குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்க முடிவெடுத்து இருக்கின்றேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் உறுதுணையாக இருந்த சக வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கிளாசன் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, June 2, 2025, 18:18 [IST]
Other articles published on Jun 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+