Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் போட்டியிலேயே ஹாட்ரிக்கோடு 6 விக்கெட்.. தென் ஆப்பிரிக்க பவுலர் உலக சாதனை!

டாக்கா: களமிறங்கிய முதல் ஒருநாள் போட்டியிலேயே ஹாட்ரிக் சாதனை மற்றும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை பதிவு செய்துள்ளார் தென் ஆப்பிரிக்க இளம் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா, நேற்று வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடியது.

ககிசோ ரபடா

ககிசோ ரபடா

இந்த போட்டியில், தென் ஆப்பிரிக்காவுக்காக 20 வயது வலது கை வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா முதல்முறையாக ஒருநாள் போட்டியில், களமிறங்கினார். முன்னதாக அவ்வணிக்காக 4 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை ரபடா வீழ்த்தியிருந்தார்.

பெஸ்ட் சாதனை

பெஸ்ட் சாதனை

ரபடாவின் ஆட்டம்தான் நேற்று வங்கதேச பேட்டிங்கை புரட்டி போட்டுவிட்டது. ஏனெனில் மொத்தம் 8 ஓவர்கள் வீசிய ரபடா, 16 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார். தான் ஆடும் முதல் ஒருநாள் போட்டியில், ஒரு பவுலர் படைத்த பெஸ்ட் சாதனை இதுவாகும்.

ஹாட்ரிக் சாதனை

ஹாட்ரிக் சாதனை

அதிக விக்கெட்டுகளை சாய்த்த சாதனை ஒருபக்கம் என்றால், முதல் போட்டியிலேயே ஹாட்ரிக் சாதனை படைத்த வீரர் பட்டியலில், 2வதாக சேர்ந்துள்ளார் ரபடா. முன்னதாக வங்கதேச வீரர் தைஜுல் இஸ்லாம், தனது முதல் ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

பலியானோர்

பலியானோர்

ரபடா தான் வீசிய 2வது ஓவரிலேயே தமிம் இக்பால், லிடன் தாஸ், மற்றும் முகமதுல்லாஆகிய 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி இச்சாதனையை பதிவு செய்தார். இக்பால் பௌல்ட் செய்யப்பட்ட நிலையில், லிட்டன் தாஸ், பர்கான் பெகார்டியனிடம் கேட்ச் கொடுத்தார். முகமதுல்லா எல்.பி.டபிள்யூ ஆனார்.

அவங்க ஊர்லயும் அவருதான் பெஸ்ட்

அவங்க ஊர்லயும் அவருதான் பெஸ்ட்

தென் ஆப்பிரிக்க பவுலர் ஒருவரின் உட்சபட்ச சாதனையும் ரபடாவுடையதே. முன்னதாக 2006ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மகயா என்டினி 22 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை சாய்த்தது அந்த அணியின் சிறந்த பவுலிங் பெர்பார்மன்சாக இருந்தது. மேலும், முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் (மற்றும் அதற்கும் மேல்) வீழ்த்திய தென் ஆப்பிரிக்காவின் 2வது பவுலர் ரபடா. 1991ல் இந்தியாவுக்கு எதிராக ஆலன் டொனால்ட் தான், களமிறங்கிய முதல் போட்டியில் 5 விக்கெட்டுகளை சாய்த்திருந்தது நினைவிருக்கலாம்.

வீழ்ந்த வங்கதேசம்

வீழ்ந்த வங்கதேசம்

ரபடாவின் அசத்தல் பவுலிங் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் சிறந்த பேட்டிங் காரணமாக, மழையால் பாதிக்கப்பட்டு 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த பகல்-இரவு போட்டியில் தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 161 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 32வது ஓவரின் முதல் பந்தில் வெற்றிக் கனியை எட்டிப் பறித்தது.

Story first published: Saturday, July 11, 2015, 10:50 [IST]
Other articles published on Jul 11, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+