Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதை கவனச்சீங்களா ? இந்தியாவுக்கு எதிராக 30 ஆண்டு பழைய டெக்னிக்.. குயின்டன் டி காக் செய்த மாற்றம்

பெர்த் : 20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.

வேகப்பந்தவீச்சுக்கு சாதகமான மைதானத்தில், அனல் பறக்கும் பந்தவீச்சை தென்னாப்பிரிக்க வீரர்கள் வீசினர். இதனால் அதனை எதிர்கொள்ள முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர்.

சூர்யகுமார் யாதவ் மட்டும் அதிகபட்சமாக 40 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொதப்பியதால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 133 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது.

மின்னல் வேகம்

மின்னல் வேகம்

இந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக சூப்பர் டெக்னிக ஒன்றை தென்னாப்பிரிக்கா பயன்படுத்தியதாக ரவி சாஸ்டதரி கூறினார். அதாவது, பெர்த் ஆடுகளத்தில் வேகப்பந்தவீச்சு சூப்பராக எடுப்படும். பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும். மின்னல் வேகத்தில் பேட்ஸ்மேன்களை கடந்து செல்லும்.

தள்ளி நின்றார்

தள்ளி நின்றார்

இதற்காக தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக், எப்போதும் ஸ்டம்பிக்கு பின்னால் நிற்பதை விட இன்று கொஞ்சம் தள்ளி நின்றார். இதே போல், ஸ்லிப்பில் நின்ற வீரர்களும் தள்ளி நின்றனர். இதற்கு காரணம் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகி வேகமாக வரும் என்பதால், அதனை சரியாக பிடிக்க இந்த தூரம் மிகவும் அவசியம்.

எளிதாக பிடிக்கலாம்

எளிதாக பிடிக்கலாம்

இதன் மூலம் விக்கெட் கீப்பர் பந்தை பிடிக்க முடியாமல் கூடுதல் ரன் போகும் முறை தடுக்கப்படும். மேலும், வேகப்பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் தொட்டால் கூட, அதனை கேட்ச் பிடிக்க ஏதுவாக இருக்கும். இப்படி நின்று தான் ராகுல் கொடுத்த கேட்சை தென்னாப்பிரிக்க வீரர்கள் எளிதாக பிடித்தனர்.

ரவி சாஸ்த்ரி கருத்து

ரவி சாஸ்த்ரி கருத்து

இது குறித்து பேசிய ரவி சாஸ்த்ரி, 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பந்தவீசும் போது விக்கெட் கீப்பர்கள் இதே போல் தான் தூரமாக நின்று பிந்தை பிடிப்பார்கள், ஆனால் பந்தின் வேகம் மற்றும் ஆடுகளத்தின் தன்மை மாற, இந்த முறையும் மாறிவிட்டது. தற்போது பெர்த் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால், இந்த டெக்னிக்கை தென்னாப்பிரிக்கா பயன்படுத்தியதாக ரவி சாஸ்த்ரி கூறினார்.

Story first published: Sunday, October 30, 2022, 18:55 [IST]
Other articles published on Oct 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+