சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வு: தென் ஆப்ரிக்கா வீரர் காலீஸ் தகவல்
ஜோகன்ஸ்பர்க்: தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஜாக் காலீஸ், டர்பனில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார்.
38 வயதாகும் ஜாக் காலீஸ் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். ஆல் ரவுண்டரான காலீஸின் இந்த ஓய்வு முடிவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தனது ஓய்வு குறித்து காலீஸ் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

சரியான நேரம்...
இது எளிதான முடிவு அல்ல. இருப்பினும் ஓய்வு பெற இது சரியான நேரம் என நான் கருதுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அறிமுகம்....
1995-ல் இங்கிலாந்துக்கு எதிரான டர்பன் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான காலீஸ், 18 ஆண்டுகளாக 165 டெஸ்ட் போட்டிகளில் 44 சதங்கள் உட்பட 13,714 ரன்கள் குவித்துள்ளார்.

விக்கெட்டுகள்...
அதேபோல், 292 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் காலீஸ்.

இரண்டாமிடத்தில்....
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள், அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில், சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு இரண்டாம் இடத்தில் உள்ளார் காலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications