For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐ’யம் வெரி சாரி கோலி… ! டீம்ல எடுக்காம சதி பண்ணி ஏமாத்திட்டாங்க..! புலம்பி தள்ளிய பவுலர்

கேப்டவுன்: இந்திய கேப்டன் கோலியிடமும், ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டிருக்கிறார் தென் ஆப்ரிக்காவின் டேல் ஸ்டெய்ன்.

தென் ஆப்ரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் டேல் ஸ்டெய்ன். அண்மையில் முடிவுற்ற உலக கோப்பை தொடரில் காயம் காரணமாக வெளியேறினார்.

சில நாட்களுக்கு முன்பு டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார். டி 20 போட்டிகளில் விளையாடும் முடிவுடன் இருப்பதாகவும் அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.

டி 20ல் இல்லை

டி 20ல் இல்லை

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக அடுத்த வரும் டி20 தொடரில் அவரது பெயர் இடம்பெற வில்லை. இந்த சம்பவம் அவரது மனதை பெரிதும் பாதித்து விட்டது. அணியில் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட ஸ்டெய்ன், கோலியிடமும், இந்திய ரசிகர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.

தகுதி இருக்கிறது

அவர் கூறியதாவது: டி 20 தொடரில் விளையாடும் அளவிற்கு எனது உடல்தகுதி இருக்கிறது. ஆனால் தேர்வுக்குழுவினர் என்னை செலக்ட் பண்ணவில்லை. ஏன் அணியில் இடம்பெறவில்லை என்பதும் எனக்கு சொல்லவில்லை.

மன்னிப்பு கேட்கிறேன்

மன்னிப்பு கேட்கிறேன்

பயிற்சி ஊழியர்கள் எனது பெயரை இடம்பெறாமல் செய்து விட்டனர். அதனால் என்னுடைய இடத்தை நான் இழந்துவிட்டேன். இதன் காரணமாக நான் இந்திய அணியின் கேப்டன் கோலியிடமும், இந்திய ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.

ஆசை நிராசையானது

ஆசை நிராசையானது

ஏனெனில் நான் இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவேன் என்று அவர்கள் எதிர் பார்த்திருந்தனர். அவர்களின் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. அதனால், கோலிக்கும், கோடான கோடி ரசிகர்களிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியுள்ளார்.

Story first published: Wednesday, August 14, 2019, 16:11 [IST]
Other articles published on Aug 14, 2019
English summary
South africas ace bowler dale steyn apologies india skipper virat kohli.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+