Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு சவால் விட்ட தெ. ஆப்பிரிக்கா.. ஐபிஎல்லில் கலக்கியவர்களுக்கு வாய்ப்பு..முக்கிய வீரர் இல்லை

மும்பை: இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5டி20 போட்டி கொண்ட தொடர் வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்காக தென்னாப்பிரிக்க அணி பெவுமா தலைமையில் 16 பேர் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளது.

டி20 உலககோப்பை தொடர் முடிந்த பிறகு தற்போது தான் தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது.

இளம் வீரர் ஸ்டப்ஸ்

இளம் வீரர் ஸ்டப்ஸ்

தென்னாப்பிரிக்க அணியில் அறிமுக வீரராக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். 21 வயதான அவர், கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா டி20 சேலஞ்ச் தொடரில் 7 இன்னிங்சில் 293 ரன்கள் எடுத்துள்ளார். சராசரியாக 48 ரன்களும், ஸ்ட்ரைக் ரேட் 183 என்ற அளவில் வைத்துள்ளார். இந்த தொடரில் ஸ்டப்ஸ் 23 சிக்சர்களை விளாசியுள்ளார். ஸ்டப்ஸ் திறமையை பார்த்து மும்பை அணி அவரை தேர்வு செய்து இருந்த நிலையில் தற்போது அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திரும்பிய நட்சத்திரங்கள்

திரும்பிய நட்சத்திரங்கள்

இதே போன்று காயம் காரணமாக 6 மாதங்களுக்கு மேல் விளையாடாமல் இருந்த வேகப்பந்துவீச்சாளர் நோக்கியாவும் தென்னாப்பிரிக்க அணியில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வந்த வியன் பெர்னலும், 5 ஆண்டுக்கு பிறகு தென்னாப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஹேண்ட்ரிக்ஸ், கிளாசென்னும் டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐபிஎல்லில் கலக்கியவர்கள்

ஐபிஎல்லில் கலக்கியவர்கள்

இதே போன்று சுழற்பந்துவீச்சாளர்கள் தப்ரைஸ் சாம்ஷி, கேசவ் மகாராஜ் ஆகியோரும் தங்களது இடத்தை தக்க வைத்துள்ளனர். ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் கயின்டன் டி காக், ரபாடா, வெண்டர் டுசன், பிரிட்டோரியஸ், மார்கோ யான்சென் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேபி டிவில்லியர்ஸ் என்று அழைக்கப்படும் டிவால்ட் பிரவீஸ் தென்னாப்பிரிக்க அணியில் சேர்க்கப்படவில்லை.

அணி விவரம்

அணி விவரம்

பெவுமா (கேப்டன்), குயின்டன் டிகாக், ஹெண்ட்ரிக்கஸ், கிளாசென்,ஏய்டன் மார்க்கரம், கேசவ் மகாராஜ், டேவிட் மில்லர், லுங்கி கிடி, நோக்கியா, பெர்னல், பிரிட்டோரியஸ், ரபாடா, ஷாம்சி, ஸ்டப்ஸ், வெண்டர் டூசன், மார்கோ யான்சென். டி20 தரவரிசை பட்டியலில் தென்னாப்பிரிக்க அணி தற்போது இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தானுக்கு பிறகு 4வது இடத்தில் உள்ளது.

அட்டவணை

அட்டவணை

ஜூன் 9 முதல் டி20 டெல்லி

ஜூன் 12 இரண்டாவது ட20 கட்டாக்

ஜூன் 14 மூன்றாவது டி20 விசாகப்பட்டினம்

ஜூன் 17 நான்காவது டி20 ராஜ்காட்

ஜூன் 19 ஐந்தாவது டி20 பெங்களூரு

Story first published: Tuesday, May 17, 2022, 16:40 [IST]
Other articles published on May 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+