Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் இன்று மோதல்

ஜார்ஜ்டவுன்:பலவீனமான வங்கேதசத்தை, பலவான் தென் ஆப்பிரிக்கா இன்று நடைபெறும் சூப்பர் 8 போட்டியில் சந்திக்கிறது.

லீக் போட்டிகளில் அப்படி, இப்படி விளையாடி எப்படிேயா சூப்பர் 8 சுற்றுக்கு முன்ேனறி விட்ட வங்கதேசம் தொடர்ந்து அடி மேல் அடி வாங்கி வருகிறது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணியை வங்கதேசம் இன்று ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் சந்திக்கிறது.

சூப்பர் எட்டு சுற்றுக்கு முதல் முறையாக முன்ேனறிய பெருமையுடன் உள்ள வங்கதேசம், இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெறாமல் தொடர்ந்து தோற்று வருகிறது. இதனால் அந்த நாட்டு ரசிகர்ள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

எனவே இன்றைய போட்டியிலாவது வெல்லலாம் என வங்கதேசம் நினைக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்பே இல்ைல என்றுதான் ெசால்ல வேண்டும்.

கடும் பலத்துடன் காணப்படும் தென் ஆப்பிரிக்கா இன்றைய போட்டியில் 300 ரன்களுக்கு மேல் குவிக்கும் எனத் தெரிகிறது. இரு அணிகளும் இதுவரை 7 ஒரு நாள் போட்டிகளில் சந்தித்துள்ளன. அனைத்திலும் தென் ஆப்பிரிக்காவே ஆணித்தரமாக வென்றுள்ளது. உலகக் கோப்பைப் போட்டியில் இரு அணிகளும் ஒருமுறை மோதியுள்ளன. அதிலும் வங்கதேசமே தோற்றுள்ளது.

அரை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பை இன்றைய வெற்றியின் மூலம் ெதன் ஆப்பிரிக்கா உறுதி செய்து ெகாள்ள முடியும் என்பதால், நல்ல ரன் ரேட்டுடன் போட்டியை ெவல்ல ஆயத்தமாக உள்ளது.

தென் ஆப்பிரிக்காவை எப்படி சமாளிப்பது என்ற பெரும் கவலையில் வங்கேதசம் உள்ளது.

நாளைய போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவும், அரை இறுதியில் நுைழய இப்போட்டியில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் உள்ள இங்கிலாந்தும் சந்திக்கின்றன.

2 நாள் பிரேக்குக்குப் பின்னர் சூப்பர் 8 சுற்றுப் ேபாட்டிகள் இன்று மீண்டும் தொடங்குவதால் ரசிகர்ள் உற்சாகமடைந்துள்ளனர்.

Story first published: Wednesday, December 7, 2011, 17:37 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+