Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனவெறி தூண்டும் பேச்சு… பரவாயில்லை.. மன்னித்தோம் சர்பராஸ்.. சொல்லும் டு பிளிசிஸ்

டர்பன்: பெலுக்வாயோ குறித்து சர்பராஸ் அகமது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை மன்னித்துவிட்டதாக தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் மோதிய 2-வது ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்றது. தென்ஆப்பிரிக்கா சேஸிங் செய்யும்போது, பெலுக்வாயோ பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது, பெலுக்வாயோவை இனவெறியுடன் பேசினார்.

Southafrica forgive pakistan skipper sarfraz for his racist comment

அகமது பேசியது ஸ்டம்ப்பில் இருந்த மைக் வழியே நடுவருக்கு கேட்க சர்ச்சை வெடித்தது. சர்பராஸ் மீது கடும் கண்டனங்கள் குவிந்தன. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் சர்பராஸ் அகமது செயலை கடுமையாக கண்டிக்க சர்பராஸ் தன் மன்னிப்பு கேட்டார்.

ஆட்டத்தின் போக்கு, அதனை தொடர்ந்து ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக பேசிவிட்டேன். யாரையும் புண்படுத்தியிருந்தால் நான் அவர்களிடம் நேர்மையுடன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். என் வார்த்தைகள் எந்த ஒரு நபரையும் குறிப்பிட்டு நோக்கியதல்ல என்று அவர் தெரிவித்திருந்தார்.

இருந்தும் கண்டனங்கள் தொடர்ந்த நிலையில், சர்பராஸ் அகமது பேசியதை மன்னித்துவிட்டதாக தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: சர்பராஸ் அகமது தனது பேச்சு குறித்து மன்னிப்பு கேட்டுவிட்டார்.

அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். எனவே அவரை நாங்கள் மன்னித்து விட்டோம் என்றார்.
நானும், எங்கள் அணியும் நிறவெறியுடன் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமதுவை மன்னிக்கிறோம்.

மன்னிப்பு கேட்டுவிட்டார். தென் ஆப்பிரிக்காவில் இப்படி இனிமேல் பேசாதீர்கள்.
இனிமேல் எங்கள் கையில் ஏதும் இல்லை.

நாங்கள் மன்னித்துவிட்டோம்.. இனி ஐசிசி அதைப் பார்த்துக்கொள்ளும்.தென் ஆப்பிரிக்காவுக்கு வரும் போது, மிகவும் கவனமாகப் பேசுங்கள். தயவு செய்து வீரர்களை நிறவெறியுடன் இப்படிப் பேசாதீர்கள்.

ஆனால், சர்பராஸ் எங்கள் நாட்டு வீரரை குறிப்பிட்டு பேசவில்லை என்பது தெரியும். ஆனால், அவர் பேசிய வார்த்தைகளை நாங்கள் எளிதாக எடுத்து கொள்ளவில்லை. நிலைமையை உணர்ந்து சர்பராஸ் உடனுக்குடன் மன்னிப்பு கேட்டுவிட்டார்.

மன்னிப்பு கேட்டதால், நாங்களும் மன்னித்துவிட்டோம். மன்னித்துவிட்டோம் என்பதால், நடவடிக்கைகளை ரகசியமாகச் செய்வோம் என்பதில் அர்த்தமில்லை.

நாங்கள் மிகவும் கருணையுள்ள அணி. யாரையும் தவறு செய்தால் எளிதாக மன்னித்துவிடுவோம். ஒருவேளை இதுபோன்ற சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்திருந்தால், வேறுமாதிரி நடந்திருக்கலாம் என்று டூப்பிளசிஸ் தெரிவித்தார்.

Story first published: Friday, January 25, 2019, 18:22 [IST]
Other articles published on Jan 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+