Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவின் உலக சாதனையை தகர்த்து வரலாற்று சாதனை செய்த ஸ்பெயின்.. தொடர்ந்து 21 வெற்றிகள்

மாட்ரிட்: 2026 கால்பந்து உலகக்கோப்பை வென்ற ஸ்பெயின் நாடு, தற்போது கிரிக்கெட்டிலும் வரலாற்று சாதனை படைத்து உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 21 போட்டிகளில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நீண்டகால உலக சாதனையை ஸ்பெயின் முறியடித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் 2028 டி20 உலகக்கோப்பைக்கான ஐரோப்பிய தகுதிச் சுற்று போட்டியில் பின்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் ஸ்பெயின் இந்த சாதனையை எட்டியது. இப்போட்டியில் பின்லாந்து அணி நிர்ணயித்த 131 ரன்கள் இலக்கை ஸ்பெயின் அணி எளிதாக கடந்தது. இதன்மூலம், கடந்த 2003-04ல் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து படைத்திருந்த தொடர்ச்சியான 20 வெற்றிகள் என்ற உலக சாதனையை ஸ்பெயின் கடந்துள்ளது. ஆஸ்திரேலியா அப்போது 17 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Spain Breaks Australia World Record with 21 Consecutive T20I Wins Secures Official Recognition for Cricket

ஸ்பெயின் அணியின் இந்த வெற்றிப் பயணம் கடந்த 2023 பிப்ரவரியில் ஐல் ஆஃப் மேன் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து தொடங்கியது. கடந்த 2019ல் தான் சர்வதேச டி20 தகுதியை ஸ்பெயின் பெற்றது. அன்றிலிருந்து இதுவரை விளையாடியுள்ள 50 டி20 போட்டிகளில் 41ல் வெற்றியும், வெறும் 8ல் மட்டுமே தோல்வியும் கண்டுள்ளது. கடந்த 1992ல் ஐசிசியின் இணை உறுப்பினராக சேர்ந்த ஸ்பெயின், 2017ல் முழு அங்கீகாரம் பெற்றது.

இந்த வரலாற்று சாதனைக்கு மத்தியில் ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு கவுன்சில், கிரிக்கெட் விளையாட்டை ஸ்பெயினின் அதிகாரப்பூர்வ விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. லா பெடரேஷன் ஸ்பானியோலா டி கிரிக்கெட் என்ற புதிய அமைப்பிற்கு அரசு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் மூலம் ஸ்பெயின் கிரிக்கெட் வாரியத்திற்கு அரசு நிதியுதவி மற்றும் பள்ளிகளில் கிரிக்கெட்டை ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளன. உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ஸ்பெயின் அணி, கால்பந்தை தொடர்ந்து கிரிக்கெட்டிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தயாராகி வருகிறது.

Story first published: Sunday, August 16, 2026, 8:59 [IST]
Other articles published on Aug 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+