Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உண்மையாகவே பந்தை ஸ்பின் செய்கிறார்களா ஸ்பின்னர்கள்? அழிந்து வரும் சுழல்.. அதிர வைத்த முன்னாள் வீரர்

கொல்கத்தா : இந்தியாவில் சுழல் பந்துவீச்சு என்ற கலை படிப்படியாக அழிந்து வருவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளி கார்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், டேனியல் வெட்டோரி போன்ற வீரர்கள் ஆட்டக்காரர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தார்கள் என்று தெரிவித்த முரளி கார்த்திக், அதுபோன்ற வீரர்களுக்கு தற்போது குறைபாடு நிலவுவதாகவும் தெரிவித்தார்.

அனிந்தியா தத்தா என்பவர் எழுதியுள்ள இந்திய சுழல் பந்து வீச்சாளர்களின் கதை என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அவர் இதுகுறித்து பேசினார்.

 சுழல் பந்துவீச்சாளர்கள் குறைபாடு

சுழல் பந்துவீச்சாளர்கள் குறைபாடு

சர்வதேச அளவில் ஆட்டக்காரர்களுக்கு சவாலாக விளங்கிய முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், டேனியல் வெட்டோரி போன்ற சுழல் பந்துவீச்சாளர்கள் தற்போது இல்லை என்று முன்னாள் இந்திய பந்துவீச்சாளர் முரளி கார்த்திக் வருத்தம் தெரிவித்துள்ளார்.

 புத்தக வெளியீட்டு விழா

புத்தக வெளியீட்டு விழா

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய சுழல் பந்து வீச்சாளர்களின் கதை என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட முரளி கார்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 படிப்படியாக அழிந்து வருகிறது

படிப்படியாக அழிந்து வருகிறது

இந்தியாவில் சுழல் பந்து வீச்சு என்ற கலை படிப்படியாக அழிந்து வருவதாக முரளி கார்த்திக் வருத்தம் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் பாரம்பரியமான சுழல் பந்துவீச்சாளர்களை காண்பது அரிதான விஷயமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 அரிதாகிவிட்ட எண்ணிக்கை

அரிதாகிவிட்ட எண்ணிக்கை

ஒரு காலத்தில் சுழல் பந்துவீச்சாளர்கள் அதிகமாக காணப்பட்டதாகவும், அவர்கள் தங்களது மாநிலத்திற்கு கூட தேர்வு செய்யப்படாத அளவில் கடுமையான போட்டி நிலவியதாகவும் தெரிவித்த கார்த்திக், தற்போது பாரம்பரிய சுழல் பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

 கார்த்திக் விளக்கம்

கார்த்திக் விளக்கம்

தற்போது பந்தை சுழற்றி பந்துவீச்சு மேற்கொள்ளப்படுகிறது.. ஆனால் சுழல் பந்துவீச்சு என்பது உண்மையாகவே பந்தை ஸ்பின் செய்து செய்யப்பட வேண்டியது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

 முரளி கார்த்திக் கவலை

முரளி கார்த்திக் கவலை

கடந்த 2011 முதல் 2014 வரையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் மோதிய இந்திய அணி 4க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. அது முதல் இந்திய அணியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

 குல்தீப் யாதவ்வுக்கு ஆலோசனை

குல்தீப் யாதவ்வுக்கு ஆலோசனை

இந்தியாவின் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தன்னுடைய ஸ்டைலை சிறிது மாற்றிக்கொண்டு செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள முரளி கார்த்தி, அவர் தனதை பேசை உயர்த்தாமல் பந்துவீசவும் அறிவுரை வழங்கியுள்ளார்.

Story first published: Friday, November 22, 2019, 18:09 [IST]
Other articles published on Nov 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+