Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுழற்பந்து வீச்சின் 'மன்னன்' ஷேன் வார்ன் மறைந்தார்.. உலகையே வியக்கவைத்த சாதனைகள்.. - முழு பட்டியல்

சென்னை: உலகின் முன்னணி சுழற்பந்துவீச்சாளராக திகழ்ந்த ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன்மாரடைப்பால் உயிரிழந்தார்.

Recommended Video

Legendary Shane Warne passes away at 52 after heart attack

ஓய்வுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனையாளராக இருந்த வார்னே சமீபத்தில் தாய்லாந்திற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் தங்கியிருந்த விடுதியிலேயே திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 52 ஆகும்.

ஷேன் வார்னே கடந்து வந்த பாதை

ஷேன் வார்னே கடந்து வந்த பாதை

இந்நிலையில் உலகையே வியக்கவைத்த அவரின் கிரிக்கெட் சாதனைகள் குறித்து பார்க்கலாம். ஷேன் வார்ன் கடந்த 1992ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் முதன் முதலில் அறிமுகமானார். அன்று தொடங்கி 16 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் சுழற்பந்துவீச்சில் மன்னனாக திகழ்ந்துள்ளார்.

சர்வதேச விக்கெட்கள்

சர்வதேச விக்கெட்கள்

அதன்படி மொத்தமாக 339 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 1,001 விக்கெட்களை சாய்த்துள்ளார். அவரின் சராசரி 25.51 மட்டுமே ஆகும். இதில் 38 முறை 5 விக்கெட் ஹவுல் எடுத்துள்ளார். 10 முறை ஒரே போட்டியில் 10 விக்கெட்களையும் சாய்த்த பெருமை பெற்றவர். சர்வதேச அளவில் இதுவரை 2 வீரர்கள் மட்டுமே 1000 விக்கெட்கள் எடுத்துள்ளனர். அதில் வார்னேவும் ஒருவர்.

 உலகமே வியந்த சாதனை

உலகமே வியந்த சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் ஷேன் வார்னே 2வது இடத்தில் உள்ளார். 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வார்ன் 708 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முதலில் 700 விக்கெட்களை கடந்தவர் என்ற பெருமை வார்னேவையே சேரும். ஆனால் அவருக்கு பின்னர் தான் முத்தையா முரளிதரனே அந்த மைல்கல்லை எட்டினார். இதுமட்டுமல்லாது இன்று வரை 700 விக்கெட்களை தொட்ட ஒரே ஒரு ஆஸ்திரேலிய வீரர் வார்னே மட்டுமே ஆகும்.

ஒரே சீரிஸில் 40 விக்கெட்

ஒரே சீரிஸில் 40 விக்கெட்

5 போட்டிகள் கொண்ட ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றி சுழற்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஷேன் வார்ன் 3வது இடத்தில் உள்ளார். கடந்த 2005ம் ஆண்டு ஆஷஸ் தொடரின் போது ஷேன் வார்ன் 40 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். அப்போது அவருடைய சராசரி 19.92 மட்டுமே ஆகும்.

மொத்த விக்கெட்கள்

மொத்த விக்கெட்கள்

இதுவரை 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வார்னே 708 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 191 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 293 விக்கெட்களை கைப்பற்றியவர். ஐபிஎல் தொடரிலும் வார்னே விளையாடியுள்ளார். 55 போட்டிகளில் ஆடி 57 விக்கெட்களை எடுத்துள்ளார்.

Story first published: Friday, March 4, 2022, 23:00 [IST]
Other articles published on Mar 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+