Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

25 வருஷமா இருந்த ரெக்கார்டை "சுத்தி" விட்டு உடைத்தெறிந்த இந்திய அணி!

நாக்பூர்: கடந்த 25 வருடமாக முறியடிக்கப்படாமல் இருந்த ஒரு சாதனையை இந்திய டெஸ்ட் அணியின் சுழல் புயல்களான அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமீத் மிஸ்ரா ஆகியோர் உதவியுடன் உடைத்து இந்தியா புதிய சாதனை படைத்தது. அதாவது இந்திய அணிக்கு எதிராக எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் என்ற "பெருமை" தென் ஆப்பிரிக்காவின் 79 ரன்களுக்குக் கிடைத்துள்ளது.

நாக்பூரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதல் நாளான நேற்று இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 215 ரன்களுக்கு இழந்தது.

ஆனால் சற்றும் கலங்காத இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்காவை நையப்புடைத்து வெறும் 79 ரன்களில் சுருட்டி தூக்கிப் போட்டு விட்டது. மேலும் புதிய சாதனையையும் இந்தியா இன்று படைத்தது.

பத்தும் நமக்கே

பத்தும் நமக்கே

தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸை 79 ரன்களுக்கு இழந்தது என்றால் அந்த அணியின் பத்து விக்கெட்களையும் சுழற்பந்து வீச்சாளர்களே வீழ்த்தி அசத்தினர்.

அஸ்வினுக்கு 5

அஸ்வினுக்கு 5

இதில் அஸ்வின் மட்டும் 5 விக்கெட்களை அள்ளிச் சாப்பிட்டு விட்டார். ஜடேஜாவின் பங்கு 4 விக்கெட்கள். மிஸ்ராவுக்கு மிச்சமுளா்ள ஒரு விக்கெட் கிடைத்தது. இஷாந்த் சர்மாவுக்கு விக்கெட் கிடைக்கவில்லை.

14வது முறையாக 5 விக்கெட்

14வது முறையாக 5 விக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்களை வீழ்த்துவது இது 14வது முறையாகும்.

ரொம்பக் கம்மி ஸ்கோர்

ரொம்பக் கம்மி ஸ்கோர்

இந்தியாவுக்கு எதிராக ஒரு அணி எடுத்த மிகவும் குறைந்த டெஸ்ட் ஸ்கோர் இதுதான். இதற்கு முன்பு இலங்கை அணி 82 ரன்கள் எடுத்ததே குறைந்த ஸ்கோராக இருந்தது. 1990ம் ஆண்டு இந்த ரன் எடுக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 25 வருடமாக இது முறியடிக்கப்படாமல் இருந்தது. இன்று அது உடைந்தது.

68 ரன்களுக்கு 8 விக்கெட்கள் காலி

68 ரன்களுக்கு 8 விக்கெட்கள் காலி

தென் ஆப்பிரிக்க அணி தனது கடைசி 8 விக்கெட்களை 68 ரன்களுக்கு இழந்தது உண்மையிலேயே பரிதாபகரமானதாகும். முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான பிட்ச் நாக்பூர் பிட்ச் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, November 26, 2015, 14:28 [IST]
Other articles published on Nov 26, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+