சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு கல்யாணம்-தோழியை மணக்கிறார்

ஐபிஎல் போட்டிகளில் ஜொலித்து வரும் அஸ்வின் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக உருவெடுக்கும் நாளை நோக்கி வேகமாக நடை போட்டு வருகிறார். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்ல அஸ்வினின் பந்து வீச்சும் ஒரு காரணம். இந்த நிலையில் இவருக்கு சமீபத்தில் ரகசியமான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தன்னுடைய பள்ளித் தோழியான ப்ரீத்தியை மணக்கிறார் அஸ்வின்.
ஐபிஎல் போட்டிகள் உச்சத்தில் இருந்தபோதுதான் இந்த நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளனர். யாருக்கும் இதற்கு அழைப்பு விடுக்கவில்லை. குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இதில் பங்கேற்றுள்ளனர். சென்னையில்தான் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாம். திருமணம் நவம்பரில் நடைபெறவுள்ளதாம்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:47 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications