சென்னை ஐபில் போட்டிகள்: பறக்கும் ரயில்கள் நேரம் மாற்றம்

இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுவதால், சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே சிறப்பு பறக்கும் ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்திருந்ததது. இதில், ஏப்ரல் 22, 25, மே 14, 21, 22 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட ரயில்களின் நேரம் மாற்றியமைப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.30 மணிக்கு பறக்கும் ரயில் புறப்பட்டு, 12.15 மணிக்கு வேளச்சேரி சென்றடையும். வேளச்சேரியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரயில் 12.15 மணிக்கு சென்னை கடற்கரையை சென்றடையும்.
இது தவிர இரவு 10.50 மணிக்கு புறப்படுவதாக இருந்த வேளச்சேரி - சென்னை கடற்கரை ரயில் (ரயில் எண் 41138) போட்டி நடைபெறும் நாட்களில் மட்டும் இரவு 11.10 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story first published: Thursday, April 18, 2013, 12:35 [IST]
Other articles published on Apr 18, 2013


Click it and Unblock the Notifications