Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவின் வெறித்தன பந்துவீச்சு.. 152 ரன்களில் சுருண்ட தென்னாப்பிரிக்கா.. மேட்ச்னா இது தான் !

பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளம் தயாரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் தயாரிக்கப்பட்டதால், போட்டியில் எப்படி அனல் பறக்கும் என்பதை ஆஸ்திரேலியா இன்று காட்டியது.

அனல் பறந்த பந்துவீச்சு

அனல் பறந்த பந்துவீச்சு

பச்சை பசேல் என்ற ஆடுகளம் காணப்பட்டதால், ஆட்டம் தொடங்கிய சில ஓவர்கள் வரை பந்து தனது வேலையை காட்டியது. பிரிஸ்பேன் மைதானத்தில் பவுன்சும் இருக்கும் என்பதால், ஆஸ்திரேலிய பவுலர்கள் இந்த ஆடுகளத்தில் எமன் போல் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மன்களுக்கு காட்சி அளித்தனர். ஒவ்வொரு பந்திலும் அனல் பறக்க தென்னாப்பிரிக்க விக்கெட் கொத்து கொத்தாக விழுந்தது.

சரிவிலிருந்து மீட்டனர்

சரிவிலிருந்து மீட்டனர்

டீன் எல்கார் 3 ரன்களிலும், சாரேல் எர்வே 10 ரன்களிலும், வெண்டர் டுசன் 5 ரன்களிலும் சோண்டா டக் அவுட்டாக 27 ரன்கள் சேர்ப்பதற்குள் தென்னாப்பிரிக்க அணி 27 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பெவுமா மற்றும் வெர்ரையின் ஜோடி ஒரு அளவிற்கு கூட்டணி அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

152 ரன்களுக்கு அவுட்

152 ரன்களுக்கு அவுட்

வேகப்பந்துவீச்சாளர்கள் தான் இந்த ஆடுகளத்தில் ஜொலித்தார்கள் என்று பார்த்தால், சுழற்பந்துவீச்சாளரான லயானும் கதகளி ஆடினார். அவருடைய பந்து வீச்சையும் எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் ஆட்டமிழந்தது கொடுமையிலும், கொடுமையாக இருந்தது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்னாப்பிரிக்க அணி 152 ரன்களில் ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியாவும் போராட்டம்

ஆஸ்திரேலியாவும் போராட்டம்

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கும் ஆரம்பமே பேரதிர்ச்சியாக இருந்தது. வார்னர் கோல்டன் டக் அவுட்டாக, உஸ்மான் கவாஜா 11 ரன்களிலும், மார்னஸ் லாபஸ்சேங் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணியை டிராவிஸ் ஹேட் மற்றும் ஸ்மித் ஜோடி அதிரடியாக விளையாடி மீட்டனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து , 7 ரன்கள் பின்தங்கி உள்ளது.

Story first published: Saturday, December 17, 2022, 17:29 [IST]
Other articles published on Dec 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+