Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய ரெக்கார்டா? சொந்த மண்ணில் இந்தியா சாதனை.. மற்ற நாட்டையும் பாருங்க

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி கடந்த 10 ஆண்டுகளில் சொந்த மண்ணில் பல்வேறு சாதனைகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் படைத்து வருகிறது.

2012 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி எந்த ஒரு டெஸ்ட் தொடரையும் தனது சொந்த மண்ணில் தோற்கவில்லை.

இந்த நிலையில் மற்ற நாடுகள் தங்கள் சொந்த மண்ணில் கடந்த 10 ஆண்டுகளில் எவ்வளவு வெற்றி தோல்விகளை சந்தித்து இருக்கிறார்கள் என்று தற்போது பார்க்கலாம்.

ஆஸி, நியூசி ரெக்கார்ட்

ஆஸி, நியூசி ரெக்கார்ட்

ஆஸ்திரேலிய அணி கடந்த 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு தனது சொந்த மண்ணில் 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் அந்த அணி 36 போட்டிகளில் வெற்றியும் 6 போட்டிகளில் தோல்வியும் அடைந்திருக்கிறது. இதில் நான்கு போட்டிகளில் இந்தியாவிடம் தோற்றது. ஆகும். இதே போன்று நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் 26 போட்டிகளில் வெற்றியும் 6 போட்டிகளில் தோல்வியும் தழுவி இருக்கிறது.

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ரெக்கார்ட்

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ரெக்கார்ட்

இதேபோன்று தென்னாபிரிக்க அணி கடந்த 10 ஆண்டுகளில் சொந்த மண்ணில் 44 டெஸ்ட் போட்டியில் விளையாடியிருக்கிறது. இதில் 28 போட்டியில் வெற்றியும் 12 போட்டியில் தோல்வியும் தழுவி இருக்கிறது. இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது.

இந்தியா ரெக்கார்ட்

இந்தியா ரெக்கார்ட்

இதில் 39 போட்டிகளில் வெற்றியும் 18 போட்டிகளில் தோல்வியும் அடைந்து இருக்கிறது. இதில் முதலிடத்தில் இந்திய அணி இருக்கிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் சொந்த மண்ணில் 44 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள இந்திய அணி 36 ஆட்டங்களில் வெற்றியும் இரண்டே இரண்டு போட்டிகளில் தோல்வியும் தழுவி இருக்கிறது. இதில் ஒன்று ஆஸ்திரேலியாவுடன் இன்னொன்று இங்கிலாந்துடன் அடைந்த தோல்வியாகும்.

காரணம் என்ன

காரணம் என்ன

இந்திய அணியின் வெற்றிக்கு காரணமே சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களும் வேகப்பந்துவீச்சாளர்களும் தான். இந்திய அணியில் அஸ்வின் ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் பேட்டிங்கில் ரன்கள் சேர்ப்பதால் இந்திய அணி சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினமான காரியமாக மற்ற அணிகளுக்கு மாறிவிட்டது. எனினும் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக பயன்படுத்துவதை இந்தியாவின் ஆதிக்கத்துக்கு காரணம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் குற்றம் சாட்டி வருகிறது.

Story first published: Wednesday, February 22, 2023, 14:33 [IST]
Other articles published on Feb 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+