Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2015 உலகக் கோப்பை... 10 விஷயம் சொல்றோம் கேளுங்க...!

மெல்போர்ன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் 563 நாட்கள் உள்ளன. 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்த சில சுவாரஸ்யத் துளிகள்....

ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் சேர்ந்து இந்த உலகக் கோப்பை போட்டியை நடத்தப் போகின்றன.

சாம்பியனாக அடியெடுத்து வைக்கும் இந்தியா

சாம்பியனாக அடியெடுத்து வைக்கும் இந்தியா

இந்திய கிரிக்கெட் அணி இப்போட்டிக்குள் நடப்புச் சாம்பியனாக அடியெடுத்து வைக்கிறது.

23 ஆண்டுகளுக்குப் பிறகு

23 ஆண்டுகளுக்குப் பிறகு

23 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவை இணைந்து உலகக் கோப்பைப் போட்டியை நடத்துகின்றன.

கடைசியாக 1992ல்

கடைசியாக 1992ல்

கடைசியாக இந்த இரு நாடுகளும் இணைந்து 1992ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியை நடத்தின.

பிப்ரவரி 14 முதல் மார்ச் 29 வரை

பிப்ரவரி 14 முதல் மார்ச் 29 வரை

2015 உலகக் கோப்பைப் போட்டிகள் பிப்ரவரி 14ம் தேதி தொடங்கி மார்ச் 29ம் தேதி வரை நடைபெறும்.

14 அணிகள்

14 அணிகள்

மொத்தம் 14 அணிகள் இதில் பங்கேற்கின்றன. இதில் 10 அணிகள் ஐசிசியின் முழு நேர உறுப்பினர்கள். மீதமுள்ள 4 அணிகளும் தகுதிப் போட்டியின் அடிப்படையில் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும்.

44 நாட்களில் 49 போட்டிகள்

44 நாட்களில் 49 போட்டிகள்

44 நாட்கள் போட்டிகள் நடைபெறும். மொத்தம் 49 போட்டிகள் இடம் பெறும்.

2 பிரிவுகள்

2 பிரிவுகள்

ஏ மற்றும் பி பிரிவாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 7 அணிகள் இடம் பெறும்.

14 இடங்களில் போட்டிகள்

14 இடங்களில் போட்டிகள்

இரு நாடுகளையும் சேர்ந்து 14 இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 7 இடங்கள் ஆஸ்திரேலியாவில் உள்ளன. நியூசிலாந்தில் மீதமுள்ள 7 இடங்களும் உள்ளன.

இறுதிப் போட்டி மெல்போர்னில்

இறுதிப் போட்டி மெல்போர்னில்

மெல்போர்ன் விளையாட்டு மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறும். 1992 இறுதிப் போட்டியும் கூட இங்குதான் நடந்தது.

அரை இறுதிகள்

அரை இறுதிகள்

ஆக்லாந்தில் ஒரு அரை இறுதிப் போட்டியும், சிட்னியில் இன்னொரு அரை இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது.

Story first published: Tuesday, July 30, 2013, 15:19 [IST]
Other articles published on Jul 30, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+