நாளை மும்பையில் இந்தியா-ஆஸ்திரேலியா 20-20 போட்டி
மும்பை
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 20-20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நடந்த 7 ஒருநாள் போட்டி தொடரை ஆஸ்திரேயிலா கைப்பற்றிவிட்டது. இந்திய அணியை 4-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றுவிட்டது. பெங்களூரில் நடந்த போட்டி மழையால் பாதியில் நிறுத்தப்பட்டது.
இந் நிலையில் 20-20 போட்டி நாளை மும்பையில் நடக்கிறது. இது இரவு 7 மணிக்கு தொடங்கும்.
20-20 கிரிக்கெட்டில் இந்தியா வலுவான அணியாக மாறியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் உலக கோப்பையை தட்டி வந்தது. மேலும் அந்த அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இதனால் நாளைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் இளம் வீரர்களே களமிறக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
ஆஸ்திரேலியா வீரர் சைமண்ட்சை ரசிகர்கள் குரங்கு என கேலி செய்த விவகாரம் பெரிதாகியுள்ளதால் நாளைய போட்டிக்கு மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தவறாக நடக்கும் ரசிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:31 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications