
ஹைதராபாத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு நாட்டை உலுக்கியிருக்கிறது. இதுபற்றி கொஞ்சமும் வருந்தாமல் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுடன் முதலாவது டெஸ்ட் போட்டியை சென்னையில் 'கொண்டாடி'க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 2-ந் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் குண்டுவெடிப்பு சம்பவத்தால் உறைந்து போயிருக்கும் அந்த நகரத்தின் ரத்தம் காய்வதற்குள் அதே இடத்தில் நாங்கள் கிரிக்கெட் விளையாடுவோம் என்று மனசாட்சியே இல்லாமல் ஆஸ்திரேலியா அணி அறிவித்திருந்தது.
இதையே தற்போது இந்திய அணியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரையில் உள்ளூர் மக்களின் மரணத்தைவிட ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள், இந்திய கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைத்தால் போதும். இழவு வீடாக இருந்தாலும் கிரிக்கெட் விளையாடுவோம் என்ற தொனியுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
அதுவும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரிகளில் ஒருவரான ராஜிவ் சுக்லா இப்படி சொல்கிறார்..
"ஹைதராபாத்தில் என்ன நடந்துவிட்டது? அங்கிருந்து போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய காரணம் எதுவும் இல்லையே" என்று மனசாட்சியே இல்லாமல் பேசியிருக்கிறார்..
இப்படிப்பட்ட 'கான்கிரீட்' கிரிக்கெட் மனநிலையாளர்களை என்னதான் செய்வது?