Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குளிக்கலையா... கவலைப்படாதீங்க, இனி உங்களுக்கு டோணி துணை வருவார்

துபாய்: இந்திய கிரிக்கெட் கேப்டன் டோணி பெயரில் ஒரு பெர்ப்யூம் விற்பனைக்கு வந்துள்ளது. அதை டோணியே தொடங்கி வைத்தார்.

ஏற்கனவே ரோஜர் பெடரர், டேவிட் பெக்காம் போன்ற சர்வதேச பிரபலங்களின் பெயர்களில் பெர்ப்யூம்கள் உள்ளன. அந்த வரிசையில் தற்போது டோணியும் இணைந்துள்ளார்.

துபாயில் நடந்த நிகழ்ச்சியின்போது இந்த பெர்ப்யூம் விற்பனையைத் தொடங்கி வைத்தார் டோணி.

7 By MS Dhoni

7 By MS Dhoni

இந்த பெர்ப்யூமுக்கு '7 By MS Dhoni' என்று பெயரிட்டுள்ளனர். டோணிக்கு ராசியான நம்பர் 7 என்பதால் அந்த நம்பரைப் போட்டு பெயரிட்டு விட்டனர்.

மொத்தம் 6 வகை

மொத்தம் 6 வகை

6 வகையான பெர்ப்யூம் ரகங்கள் தற்போது விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. இதில் பாடி ஸ்பிரேயும் அடக்கம். இதன் வெளியீட்டு விழா துபாயில் மதினாத் ஜுமைராவில் உள்ள அல் ஜோஹரா பால்ரூம் அரங்கில் நடந்தது.

பவர் - கூல் - எனர்ஜி

பவர் - கூல் - எனர்ஜி

பவர், ஆக்ஷன், கனெக்ட், கூல், எனர்ஜி, இன்டென்ஸ் என்று இந்த ஆறு வகை பெர்ப்யூமுக்கும் தனித் தனியாக பெயரிட்டுள்ளனர். இந்த ஆறு வகையையும் தேர்வு செய்ததும் கூட டோணிதானாம்.

எனக்கு எல்லாமே 7.. சொல்லுறது நம்ம ஆளு

எனக்கு எல்லாமே 7.. சொல்லுறது நம்ம ஆளு

நிகழ்ச்சியின்போது டோணி பேசுகையில்,நான் பிறந்தது 1981, ஜூலை 7. எனது ஜெர்சி எண் 7, எனவேதான் 7 என்பது எனக்கு மிகவும் விசேஷமானதாகும். எனக்கும் 7ம் எண்ணை ரொம்பவே பிடிக்கும். இது நியூட்ர் நம்பரும் கூட, பாசிட்டிவும் கிடையாது, நெகட்டிவும் கிடையாது. எனவே இது மிகவும் விசேஷமான எண்ணாகும்.

எனக்குப் பிடித்தது 'எனர்ஜி'தான்

எனக்குப் பிடித்தது 'எனர்ஜி'தான்

எந்த பெர்ப்யூம் வகை உங்களுக்குப் பிடிக்கும் என்ற கேள்விக்கு டோணி பதிலளிக்கையில் எல்லாமே பிடித்ததுதான். இருப்பினும் எனர்ஜி மிகவும் பிடிக்கும். அது சற்று விசேஷமானது. எந்தக் காரியமாக இருந்தாலும் எனர்ஜி அவசியம் இல்லையா என்றார்.

Story first published: Friday, February 1, 2013, 13:52 [IST]
Other articles published on Feb 1, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+