Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

100 டெஸ்ட் போட்டியில் கேப்டனாக சாதனை படைத்த தென்னாப்பிரிக்காவின் க்ரேம் ஸ்மித்

Graeme Smith
ஜோகன்ஸ்பெர்க்: இன்றைய வெள்ளிக்கிழமை கிரிக்கெட் உலகில் மிகவும் முக்கியமானதாகும். அப்படி என்ன விஷேசமா? தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் வீரர் க்ரேம் ஸ்மித் இன்று 32வது பிறந்த நாளை கொண்டாடுவதுடன் தமது கேப்டன் பொறுப்பில் 100-வது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கிறார். உலகிலேயே 100 டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக இருந்த பெருமை ஸ்மித்துக்குத்தான்!

கடந்த 2000-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் 2003-ம் ஆண்டு ஸ்மித் கேப்டன் பொறுப்பேற்றார்.

இன்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி அவரது கேப்டன் பொறுப்பில் 100-வது டெஸ்ட் போட்டி. இதுவரையிலான 99 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த ஸ்மித், 47 போட்டிகளில் வெற்றியை எட்டியிருக்கிறார். 26 போஒட்டிகள் தோல்வியிலும் 26 போட்டிகள் டிராவிலும் முடிவடைந்திருக்கின்றன.

இதற்கு முன்பு 93 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர் ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர்தான்.. அவரது கேப்டன் பொறுப்பில் ஆஸ்திரேலியா அணி 32 போட்டிகளில் வென்றுள்ளது. 22 போட்டிகளில் தோல்வி அடைந்தது.

Story first published: Sunday, February 3, 2013, 10:32 [IST]
Other articles published on Feb 3, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+