Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யுவராஜின் அதிரடி ஆட்டம்.. முதல் டுவென்டி 20 போட்டியில் இந்தியா 'கூல்' வெற்றி!

Yuvraj Singh
புனே: யுவராஜ் சிங்கின் ஆல் ரவுண்ட் அதிரடி ஆட்டத்தின் காரணமாக நேற்று புனேயில்நடந்த இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதலாவது டுவென்டி 20 போட்டியில் இந்தியா அருமையான வெற்றியைப் பெற்றது.

சிறப்பாக பேட்டிங் செய்த யுவராஜ் சிங், பந்து வீச்சிலும் 3 விக்கெட்களைச் சாய்த்து அசத்தி விட்டார். டுவென்டி 20 போட்டிகளில் அவரது சிறந்த பந்து வீச்சு இதுதான். பேட்டிங்கின்போது படு துரிதமாக ஆடி 38 ரன்களைச் சேர்த்துக் கொடுத்தார் யுவராஜ் சிங்.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா.

முன்னதாக இந்திய அணி டாஸ் வென்று இங்கிலாந்தை பேட் செய்யப் பணித்தது. இதையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களைக் குவித்தது.

ஹேல்ஸ் சிறப்பாக ஆடி 56 ரன்களைக் குவித்தார். அவரை யுவராஜ் சிங் போல்டாக்கி அனுப்பி வைத்தார். அவருக்கு அடுத்து அதிக ரன்களை எடுத்தவர் ரைட்தான். அவரது பங்கு 34 ரன்களாகும். கடைசி நிலையில் இறங்கிய பட்லர் 33 ரன்களைச் சேர்த்தார்.

இந்தியத் தரப்பில், யுவராஜ் சிங் 3 விக்கெட்களையும், திண்டா 2 விக்கெட்களையும், அஸவின் ஒரு விக்கெட்டையும் வீழ்கத்தினர்.

பின்னர் பேட்டிங்கைத் தொடங்கிய இந்தியா 17.5 ஓவர்களிலேயே 5 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றிக்குத் தேவையான ரன்னைத் தொட்டது. இங்கும் யுவராஜ் சிங்தான் கை கொடுத்தார். மின்னல் வேகத்தில் ஆடிய அவர் 38 ரன்களைக் குவித்தார்.

ஆட்ட நாயகனாகவும் யுவராஜ் சிங்கே தேர்வானார்.

தொடர் வெற்றி பெற்றால் முதலிடம் கிடைக்கும்

இந்திய அணி இங்கிலாந்துடன் நடக்கும் 2 டுவென்டி 20 போட்டிகள் மற்றும் அடுத்து பாகிஸ்தானுடன் நடைபெறும் 2 டுவென்டி 20 போட்டிகளில் வென்றால் தரவரிசையில் முதலிடத்திற்கு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, December 21, 2012, 8:51 [IST]
Other articles published on Dec 21, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+