Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. கொல்கத்தாவில் கலகலப்பான தொடக்க விழா!

கொல்கத்தா: வருடாந்திர ஐபிஎல் திருவிழா இன்று தொடங்குகிறது. கொல்கத்தாவில் கோலாகலமான தொடக்க விழாவுடன் 6வது ஐபிஎல் தொடர் தொடங்குகிறது.

ஏப்ரல் 2ம் தேதி தொடங்கி கிட்டத்தட்ட 2மாதங்களுக்கு ஆடப் போகிறார்கள் - டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகளை.

கொல்கத்தாவில் இன்று மாலை பிரமாண்டமானதாக தொடக்க விழா நடைபெறும். 3ம் தேதி முதல் போட்டிகள் தொடங்கும்.

மாபெரும் வருவாய் சுரங்கம்

மாபெரும் வருவாய் சுரங்கம்

இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டுபிடித்த மாபெரும் வருவாய் சுரங்கம்தான் இந்த ஐபிஎல். எனப்படும் இந்தியன் பிரிமீயர் லீக்.

பாவம் கபில்தேவ்

பாவம் கபில்தேவ்

உண்மையில் கபில்தேவ் தான் இந்த புண்ணியத்திற்கு காரணகர்த்தா. அவர் பாவம் ஏதோ இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கட்டுமே என்ற ஆதங்கத்தில் இந்தியன் கிரிக்கெட் லீக்கைத் தொடங்கினார். ஆனால் அதிரடியாக ஐபிஎல்லைத் தொடங்கி பெரும் காசு பார்க்க ஆரம்பித்து விட்டது பிசிசிஐ.

கோடிகளைப் புரட்டிக் கொடுத்த லலித் மோடி

கோடிகளைப் புரட்டிக் கொடுத்த லலித் மோடி

ஐபிஎல் போட்டிகள் இன்று பணம் காய்ச்சிமரமாக காரணம் லலித் மோடிதான். இவர்தான் ஐபிஎல்லின் கமிஷனராக ஆரம்பத்தில் இருந்தவர். எதைத் தொட்டாலும் காசு என்று மாற்றி கிரிக்கெட் வாரியத்தை பணத்தில் மிதக்க விட்டவர் மோடிதான். இன்று இவர் லண்டனில் போய்ப் பதுங்கியுள்ளார்.

புது அணியுடன் 6வது தொடர்

புது அணியுடன் 6வது தொடர்

வழக்கமாக இருக்கும் அணிகளுடன் புதிதாக ஹைதராபாத் சன் ரைசர்ஸ் என்ற அணியுடன் 6வது தொடர் தொடங்குகிறது. ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி நீக்கப்பட்டதால் அதற்குப் பதில் சன் டிவி குழுமத்தின் சன் ரைசர்ஸ் சேர்ந்துள்ளது.

13 ஆஸ்திரேலியர்கள்

13 ஆஸ்திரேலியர்கள்

6வது ஐபிஎல் தொடரில் 13 ஆஸ்திரேலியர்கள் ஏலம் மூலம் ஆட புகுந்துள்ளனர். மொத்தம் 37 வீரர்கள் இந்த தொடருக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அதில் அதிக விலைக்குப் போனவர் கிளன் மேக்ஸ்வெல்தான். 10 லட்சம் டாலருக்கு அவரை மும்பை இந்தியனஸ் வாங்கியுள்ளது.

76 போட்டிகள்

76 போட்டிகள்

மொத்தம் 76 போட்டிகள் 6வது ஐபிஎல் தொடரில் இடம் பெறவுள்ளன. ஏப்ரல் 3ம் தேதி முதல் போட்டி நடைபெறுகிறது.

கொல்கத்தாவில் முதல் போட்டி

கொல்கத்தாவில் முதல் போட்டி

கொல்கத்தாவில் ஏப்ரல் 3ம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸும், டெல்லி டேர்டெவில்ஸும் மோதுகின்றன.

சென்னை 3வது முறையாக சாம்பியனாகுமா...?

சென்னை 3வது முறையாக சாம்பியனாகுமா...?

கடந்து ஐந்து ஐபிஎல் தொடர்களில் 2 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியனாகியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தலா ஒருமுறை சாம்பியனாகியுள்ளன.

9 அணிகள் - 2 அணிகள் அவுட்

9 அணிகள் - 2 அணிகள் அவுட்

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், புனே வாரியர்ஸ் இந்தியா, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் என 9 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கு முன்பு ஆடிய ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகிய அணிகள் நீக்கப்பட்டு விட்டன.

வர்ராருப்பா பிட்புல்

வர்ராருப்பா பிட்புல்

இன்றைய தொடக்க விழாவில் ரேப்பர் பிட்புல் வருகிறார். முதலில் ஜெனீபர் லோபஸ் வருவதாக இருந்தது. ஆனால் அவர் ஓவர் பந்தா காட்டியதாலும், ஏகப்பட்டதைக் கேட்டதாலும் அவரை வேண்டாம் என்று நிராகரித்து விட்டனர்.

சாம்பியனாகப் போவது யாரோ?

சாம்பியனாகப் போவது யாரோ?

இந்த முறை சாம்பியன் பட்டத்தைப் பெறப் போவது யார் என்பது குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சென்னை மீண்டும் பட்டம் வெல்லுமா என்றஎதிர்பார்ப்பும் காணப்படுகிறது.

Story first published: Tuesday, April 2, 2013, 18:53 [IST]
Other articles published on Apr 2, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+