Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒத்த ரன்னுடன் நடையைக் கட்டிய சச்சின் மகன்!

மும்பை: கங்கா லீக் போட்டியில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர்,முதல் போட்டியில் ஒரே ஒரு ரன்தான் எடுத்துள்ளார்.

அதன் பின்னர் பந்து வீச்சின்போது அவர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

அர்ஜூன் டெண்டுல்கரின் விளையாட்டுத் திறன் குறித்து மீடியாக்கள் எக்குத்தப்பாக செய்தி வெளியிட்டுள்ளதால் சச்சின் சற்றே அப்செட் ஆகியுள்ளாராம்.

பார்சி கிரிக்கெட் கிளப் சார்பில்

பார்சி கிரிக்கெட் கிளப் சார்பில்

பார்சி கிரிக்கெட் கிளப் சார்பில் அர்ஜூன் டெண்டுல்கர் கங்கா லீக் போட்டியில் அறிமுகமாகியுள்ளார்.

முதல் போட்டியில் சொதப்பல்

முதல் போட்டியில் சொதப்பல்

இதில் முதல் போட்டியில் அவர் ஒரு ரன்னும், ஒரு விக்கெட்டும் எடுத்து அவரது ஆதரவாளர்களை அதிருப்திக்குள்ளாக்கினார்.

மீடியா மீடியா... ஓடியா ஓடியா...

மீடியா மீடியா... ஓடியா ஓடியா...

இந்தப் போட்டியின்போது மீடியாக்காரர்கள் அர்ஜூனை மொய்த்தெடுத்து விட்டனர். குறிப்பாக புகைப்படக்காரர்கள்.

அர்ஜூன் இங்க பாருப்பா.. ராசா...

அர்ஜூன் இங்க பாருப்பா.. ராசா...

அர்ஜூன் டெண்டுல்கரை புகைப்படம் எடுக்கக் குவிந்திருந்த புகைப்படக்காரர்கள், அவரை இந்தப் பக்கம் இந்தப் பக்கம் என்று கூறி போஸ் கொடுக்க அழைத்து கூவாத குறையாக அர்ஜூனை டென்ஷனாக்கி விட்டனர்.

11 பந்துகளைச் சந்தித்து ஒரு ரன்

11 பந்துகளைச் சந்தித்து ஒரு ரன்

முன்னதாக பேட் செய்த அர்ஜூன் 11 பந்துகளை மட்டுமே சந்தித்து ஒரு ரன்னுடன் ஆட்டமிழந்தார். அவரை சஞ்சய் சோலங்கி என்ற பந்து வீச்சாளரின் பந்து வீச்சில் ஸ்டம்ப்ட் செய்தனர்.

இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கார்... கோச்

இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கார்... கோச்

அர்ஜூனின் பயிற்சியாளரான ராஜேஷ் சனில் கூறுகையில், அர்ஜூன் இப்போதுதான் அனுபவ வீரர்களுடன் ஆட ஆரம்பித்துள்ளார். அவருக்கு இந்தப் போட்டி நம்பிக்கை அளிக்கும். அவர் ஒரு நல்ல வீரர். நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றார்.

Story first published: Tuesday, September 10, 2013, 12:14 [IST]
Other articles published on Sep 10, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+