For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கமான்.. கமான் பாய்ஸ்... மும்பை அணியின் 'பயிற்சியாளராக' மாறிய சச்சின் மகன்!

அகமதாபாத்: கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், 13 வயதுக்குட்பட்டோருக்கான மும்பை அணியில் தேர்வு செய்யப்பட்டாலும் அவர் விளையாடவில்லை. மாறாக அணியின் பிசிக்கல் டிரெய்னராக மாறியுள்ளார்.

தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை என்பார்கள்... அதேபோ சச்சினைப் போலவே அவரது மகன் அர்ஜூனும் கிரிக்கெட் வீரராக வலம் வருகிறார்.

சமீபத்தில் அவரை மும்பையின் 13வயதுக்குட்பட்டோரு்ககான அணியில் சேர்த்தனர். இது வரவேற்பையும், சர்ச்சையையும் ஒரு சேரப் பெற்றது. இருப்பினும் தற்போது ஆடும் லெவன் அணியில் அர்ஜூன் சேர்க்கப்படவில்லை. மாறாக அவர் பிசிக்கல் டிரெய்னராக மாறியுள்ளார்.

குஜராத் போட்டியில் ஆடவில்லை

குஜராத் போட்டியில் ஆடவில்லை

மும்பைக்கும், குஜராத்துக்கும் இடையிலான போட்டியில் அர்ஜூன் டெண்டுல்கர், ஆடும் அணியில் சேர்க்கப்படவில்லை. இது பலரை ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.

பாடிகார்டுகளுடன் வலம் வருகிறார்

பாடிகார்டுகளுடன் வலம் வருகிறார்

போட்டி அகமதாபாத்தில் நடப்பதால் அங்குதான் தங்கியுள்ளார் அர்ஜூன். அவருக்காக தந்தை சச்சின் பாடிகார்டுகளை ஏற்பாடு செய்துள்ளார். அவர்கள், அர்ஜூன் செல்லும் இடமெல்லாம் பாதுகாப்புக்கா கூடவே செல்கிறார்கள்.

சக வீரர்களை உற்சாகப்படுத்துகிறார்

சக வீரர்களை உற்சாகப்படுத்துகிறார்

போட்டி நடக்கும் இடத்தில் அர்ஜூன் முழுவதும் இருக்கிறார். சக வீரர்கள் ஆடுவதை உற்சாகப்படுத்தியபடி, குரல் எழுப்பியபடி காணப்படுகிறார்.

காணக் கண் கோடி வேண்டுமே...

காணக் கண் கோடி வேண்டுமே...

அர்ஜூன் டெண்டுல்கர், சச்சினின் மகன் என்பதால் தானாகவே ஸ்டார் அந்தஸ்து வந்து ஒட்டிக் கொண்டுள்ளது. இதனால் அர்ஜூனைப் பார்க்க கூட்டம் அலை மோதியபடியே உள்ளதாம் ஸ்டேடியத்தில்.

சிறப்பான சமாளிப்பு

சிறப்பான சமாளிப்பு

பயிற்சியின்போதும், போட்டியின்போதும் தன்னைப் பார்க்க கூட்டம் கூடுவதால் சற்றே நெளிய நேரிடுகிறதாம் அர்ஜூனுக்கு. இருந்தாலும், அதை திறமையாக சமாளிக்கிறாராம். சிலருக்கு ஆட்டோகிராப் கூட போட்டுக் கொடுத்தாராம்.

ஆடாததால் ஏமாற்றமில்லை

ஆடாததால் ஏமாற்றமில்லை

தன்னை ஆடும் லெவன் அணியில் சேர்க்காததால் அதிருப்தியோ, ஏமாற்றமோ அடையவில்லையாம் அர்ஜூன். மாறாக அணியினருடன் இருப்பதை சந்தோஷமாக அனுபவித்து வருகிறாராம்.

இப்ப என்ன அவசரம், மெதுவா வரட்டும், நிறைய டைம் இருக்கே...!

Story first published: Wednesday, January 23, 2013, 12:52 [IST]
Other articles published on Jan 23, 2013
English summary
Master blaster Sachin Tendulkar's son, Arjun Tendulkar who is not a part of the playing XI for Mumbai against Gujarat has been helping his team as a physical trainer, according to sources. Apart from playing the role of a physical trainer, Arjun Tendulkar is also enjoying his stay at Ahmedabad, irrespective of the presence of bodyguards sent by his father who accompany the 12-year-old where-ever he goes.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+