Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்லே வேண்டாம், முதலில் விலகுங்கள்...இலங்கை வீரர்களுக்கு ரணதுங்கா கோரிக்கை

Arjuna Ranatunga
டெல்லி: இந்தியாவின் ஒரு பகுதியில் விளையாடக் கூடாது என்றால், அப்படிப்பட்ட ஐபிஎல் போட்டிகளே நமக்கு வேண்டாம். எனவே இலங்கை வீரர்கள், ஐபிஎல்லில் விளையாடாமல் தவிர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் அர்ஜூன ரணதுங்கா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறி்த்து அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிப்பதில்லை என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருப்பது அதிர்ச்சி தருகிறது.

சென்னையில் இலங்கை வீரர்கள் விளையாட முடியாவிட்டால், மற்ற இடங்களிலும் அவர்கள் விளையாடக் கூடாது. தனிப்பட்ட முறையில் எனது கருத்து என்னவென்றால், இந்தியாவில் எந்தப் பகுதியிலும் இலங்கை வீரர்கள் விளையாடக்கூடாது. பணத்துக்காக போய் விளையாடக் கூடாது.

போர்க்குற்றத்தைக் காரணம் காட்டி இலங்கை வீரர்களுக்கு தென்னிந்தியாவில் அரசுத் தரப்பிலிருந்தும், மக்களிடமிருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இது இலங்கை மீதான குற்றச்சாட்டாகும். எனவே இதையும் இலங்கை வீரர்கள் மனதில் கொண்டு உடனடியாக ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலக வேண்டும்.

இது அரசியல் ரீதியான வேடிக்கை விளையாட்டு. இதில் கிரிக்கெட் அடிபட்டிருக்கிறது. வீரர்கள் விளையாடி ரசிகர்களை மகிழ்வி்க்கவே விரும்புகிறார்கள் என்றார் ரணதுங்கா.

ரணதுங்கா இலங்கை அரசியலிலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, March 28, 2013, 10:28 [IST]
Other articles published on Mar 28, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+