ஜூவாலாவைப் பிரிந்தார் அஸ்வினி பொன்னப்பா.. வேறு வீராங்கனையுடன் ஜோடி சேருகிறார்
ஹைதராபாத்: இந்திய பேட்மிணட்ன் களத்தை ஜோடியாக சேர்ந்து கலக்கி வந்த அஸ்வினி பொன்னப்பாவும், ஜுவாலா கட்டாவும் பிரிந்து விட்டனர். இனிமேல் ஜுவாலாவுடன் இணைவதில்லை என்ற முடிவை அஸ்வினி எடுத்துள்ளார் புதிய வீராங்கனையுடன் அவர் ஜோடி சேருகிறார்.
இதுதொடர்பாக அவர் இந்திய பேட்மிண்டன் சங்கத்திற்கும் தெரிவித்து விட்டார். எதிர் வரும் போட்டிகளில் தான் பிரதன்யா காத்ரேவுடன் சேர்ந்து ஆடப் போவதாகவும் அஸ்வினி கூறியுள்ளார்.

இந்திய மகளி்ர் பேட்மிண்டனில், முன்னணியில் இருந்து வந்த ஜோடி ஜுவாலா, அஸ்வினி. ஆனால் தற்போது ஜுவாலா சினிமா நடிகையாகி விட்டார். குத்துப் பாட்டுக்கு ஆடப் போய் விட்டார். இதனால் பேட்மிண்டன் மீதான பிடிப்பு நழுவி சினிமாப் பக்கம் அவரது கவனம்திரும்பி விட்டது. இதையடுத்தே அஸ்வினி புதிய வீராங்கனையுடன் ஜோடி சேர தீர்மானித்துள்ளார்.
2011ல் உலக பேட்மண்டன் சாம்பியன் போட்டியில் வெண்லப் பதக்கம் வென்ற ஜோடி ஜுவாலா, அஸ்வினி. அதேபோல டெல்லியில் 2010ல் நடந்த காமன்வெல்த் போட்டியிலும் இந்த ஜோடி தங்கம் வென்றது. லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் இவர்கள் பங்கேற்றனர். அதுதான் அவர்களின் கடைசிப் போட்டியாகும்.


Click it and Unblock the Notifications