மதுரையில் ஆசிய பெண்கள் கபாடி போட்டி
மதுரை: மூன்றாவது ஆசிய பெண்கள் கபாடி போட்டி மதுரையில் இன்று தொடங்குகிறது. இந்திய அணிக்கு தமிழகத்தை சேர்ந்த கவிதா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மூன்றாவது ஆசிய பெண்கள் கபாடி போட்டி மதுரையில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா, கொரியா, ஈரான், மலேசியா, ஜப்பான், வங்கதேசம், தாய்லாந்து, நேபாளம் ஆகிய நாடுகள் கலந்து கொள்கின்றன.
இந்த போட்டில் இந்தியா அணி சார்பில் இடம்பெறும் வீராங்கனைகள், டில்லி, ஐதராபாத், மதுரை போன்ற பயிற்சி மையங்களில் நடந்த பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டு பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்திய அணிக்கு கவிதா கேப்டனாகவும், டில்லியை சேர்ந்த பூஜா துணை கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 10 வீராங்கனைகள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:15 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications