Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு ஆஸி. 299 ரன் இலக்கு

பெங்களூர்: பெங்களூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற ஆஸ்திரேலியா 299 ரன்களை இலக்கு நிர்ணயித்துள்ளது.

உணவு இடைவெளை நிலவரப்படி இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. எனவே இந்த டெஸ்டுக்கு முடிவு தெரியுமா என்பது சந்தேகமாக உள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையே முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

கடைசி நாளான இன்று 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் என்ற நேற்றைய ஸ்கோருடன் ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.

41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர் வாட்சன், இஷாந்த் சர்மா பந்து வீச்சில் கிளீன் போல்டானார்.

இதைத் தொடர்ந்து 228 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்ஸ் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.

முதல் டெஸ்ட் போட்டியில் கடைசி நாளான இன்று இந்தியா வெற்றி பெற 299 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இன்று காலை ஆட்டம் துவங்கியதும் இந்திய வீரர்கள், ஆட்டத்தில் நிதானமான போக்கைக் கடைப் பிடித்தனர். உணவு இடைவேளையின் போது இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களை எடுத்திருந்தது.

சச்சின் டெண்டுல்கர் 25 ரன்களுடனும், கவுதம் கம்பீர் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் மூன்று மணி நேர ஆட்டம் மட்டுமே பாக்கியுள்ளது.

Story first published: Wednesday, December 7, 2011, 17:14 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+