Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. 268 ஆல் அவுட், பாலோ ஆன்!

மொஹாலி: மொஹாலி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாலோ ஆனைத் தவிர்க்க 1 ரன் மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில் கடைசி வீரர் ஜான்சன் அவுட்டானதால் பாலோ ஆன் தரப்பட்டது.

ஆனாலும் இப்போது இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடுகிறது. விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய பந்து வீச்சாளர் அமீத் மிஸ்ரா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. பெங்களூரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இதைத் தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடக்கிறது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 469 ரன்கள் எடுத்து நேற்று பிற்பகல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் ஓவரிலேயே அதிர்ச்சியை சந்தித்தது. ஜாகீர்கான் வீசிய பந்தில் ஸ்டெம்புகள் சிதற மேத்யூ ஹைடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து 5 ரன்களுக்கு ரிக்கி பாண்டிங்கும் ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்ட நேர இறுதியில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலிய அணி 102 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

இன்று காலை 3ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலியா ஹஸ்ஸியின் விக்கெட்டை இழந்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வாட்சன் அரை சதம் எடுத்தார். எனினும் ஆஸ்திரேலியா 240 ரன்களை நெருங்கிய போது ஹர்பஜன் பந்து வீச்சில் பிரெட்லீ ஆட்டமிழந்தார். தொடர்ந்து வாட்சன் அதிரடியாக ஆடினார். 78 ரன்கள் எடுத்த நிலையில் அவர் மிஸ்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

பாலோ ஆனை தவிர்க்க ஒரே ஒரு ரன் மட்டுமே இருந்த நிலையில் ஜான்சன், மிஸ்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 268 ரன்களில் ஆட்டமிழந்தது. முதல் போட்டியில் ஆடும் இந்திய சுழல் பந்து வீச்சாளர் அமீத் மிஸ்ரா 5 விக்கெட்களை கைப்பற்றினார்.

தற்போது இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடுகிறது.

கவுதம் கம்பீர் 28 ரன்களுடனும், ஷேவாக் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Story first published: Wednesday, December 7, 2011, 17:14 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+