பெங்களூர்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ரிக்கி பான்டிங் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
நான்கு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.
இந்திய அணியில் முனாப் படேல், ஆர்.பி.சிங் ஆகியோர் சேர்க்கப்படவில்லை. பத்ரிநாத் 12வது வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். 2 ஸ்பின்னர்களுடன் இந்தியா ஆடுகிறது.
ஆஸ்திரேலிய அணியில், கேமரூன் ஒயிட் மட்டுமே ஸ்பின்னர் ஆவார். ஜேசன் கிரெஜா 12வது வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
அணிகள் விவரம்:
இந்தியா - அனில் கும்ப்ளே (கேப்டன்), வீரேந்திர ஷேவாக், கெளதம் கம்பீர், ராகுல் டிராவிட், டெண்டுல்கர், கங்குலி, வி.வி.எஸ். லட்சுமண், எம்.எஸ்.டோணி, ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, ஜாகிர்கான், பத்ரிநாத்.
ஆஸ்திரேலியா - ரிக்கி பான்டிங் (கேப்டன்), மாத்யூ ஹெய்டன், சைமோன் காடிச், மைக் ஹூசே, மைக்கேல் கிளார்க், பிராட் ஹாதின், கேமரூன் ஒயிட், ஷான் வாட்சன், பிரெட் லீ, ஸ்டூவர்ட் கிளார்க், மிட்செல் ஜான்சன், ஜேசன் கிரெஜா.