ஆஸி நிதான பேட்டிங்-ஹெய்டன், காடிச் அபாரம்
டெல்லி: ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களான மாத்யூ ஹெய்டனும், சைமோன் காடிச்சும் அபாரமாக ஆடி, ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர்.
டெல்லியில்நடந்து வரும் 3வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா தற்போது தனது முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது.
இந்தியாவின் ரன் குவிப்புக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தொடக்க ஆட்டக்காரர்களான ஹெய்டனும், காடிச்சும் சிறப்பாக ஆடினர்.
ஹெய்டன் சிறப்பாக ஆடி 83 ரன்களைச் சேர்த்தார். அவரும் காடிச்சும் இணைந்து 79 ரன்களைக் குவித்தனர். காடிச் தனது பங்குக்கு 64 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் ரிக்கி பான்டிங் 87 ரன்களைக் குவித்தார்.
மைக்கேல் ஹூஸே 32 ரன்களுடனும், மைக்கேல் கிளார்க் 3 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
ஆஸ்திரேலியா 3 விக்கெட்களை இழந்து 287 ரன்களை எடுத்திருந்தது
Story first published: Wednesday, December 7, 2011, 17:14 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications