மும்பை: எட்டு ஐ.பி.எல் அணிகளின் இரண்டாவது சுற்று ஏலத்தில் பாகிஸ்தான் அணி வீரர் மிஸ்பா உல் -ஹக்கை ஐ.பி.எல் பெங்களூரு அணி 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
மும்பையில் எட்டு ஐ.பி.எல் அணிகளின் இரண்டாவது சுற்று ஏலம் இன்று நடைபெற்றது. ஏலத்தில் பாகிஸ்தான் அணி வீரர் மிஸ்பா உல் -ஹக்கை ஐ.பி.எல் பெங்களூரு அணி 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது.
சமீபத்தில் இந்திய சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணியில் இடம்பெற்று சிறப்பான அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்திய வீரர் மிஸ்பா.
மேலும், இந்திய அன்டர்-19 அணியின் கேப்டன் விராத் கோஹ்லி, வங்கதேசத்தின் சுழல்பந்து வீச்சாளர் அப்துர் ரசாக் ஆகிய வீரர்களையும் ஏலத்தில் பெங்களூரு அணி எடுத்தது.
ஐ.பி.எல் விதிமுறைப்படி முதல் சுற்று ஏலத்தில், போதுமான பணத்தை ஏலத்தில் செலவிடாத ஜெய்ப்பூர் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டாவது சுற்று ஏலத்தில் ஜெய்ப்பூர் அணி ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன், தென்னாப்பிரிக்கா ஆல்ரவுண்டர் மோர்ன் மோர்கல், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் தன்வீர் முதலிய வீரர்களை ஏலத்தில் எடுத்தது.
இந்திய அண்டர் -19 அணியில் விளையாடிய இடது கை பந்து வீச்சாளர் பிரதீப் சங்வான் தனது மாநில அணியியான டில்லி அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.