சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இன்று துவக்கம்

கிரிக்கெட் உலகின் டாப்-8 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று தென் ஆப்ரிக்காவில் துவங்குகிறது. இதில் அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம் பிடித்துள்ளன.
'பி' பிரிவில் போட்டி நடத்தும் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் இலங்கை இடம்பெற்றுள்ளன.
இன்று செஞ்சுரியன் சூப்பர்ஸ்போர்ட் பார்க்கில் நடக்கும் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் மோதுகின்றன. சொந்த மண்ணில் சூப்பராக அசத்தும் தென் ஆப்ரிக்கா, இலங்கையை எளிதாக வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் நம்பர்-1 அணியாக களமிறங்கும் தென் ஆப்ரிக்காவுக்கு கேப்டன் ஸ்மித் இரண்டாவது சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று தருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முன்னதாக தென் ஆப்ரிக்க கடந்த 1998ல் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றிருந்தது.
இந்திய அணி தனது முதல் போட்டியில் வரும் 26ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:31 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications