For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிக்சிங் விவகாரம்.. சென்னையில் நாளை மறுநாள் கூடுகிறது கிரிக்கெட் வாரிய செயற்குழு!

By Mathi
BCCI Logo
சென்னை: ஐபிஎல் பிக்சிங் விவகாரம் விஸ்வரூபமெடுத்திருக்கும் நிலையில் சென்னையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் நாளை மறுநாள் காலை கூடுகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமையன்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் தற்போதைய ஐபிஎல் போட்டியில் நிகழ்ந்த ஸ்பாட் பிக்சிங் விவகாரம், டெல்லி போலீசாரின் கைது நடவடிக்கை ஆகியவை பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது.

அமீத் ஷா சஸ்பென்ட்

குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்திருக்கும் வீரர் அமித்சிங்கும் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரையும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சஸ்பென்ட் செய்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அமீத் ஷாவும் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் பல புக்கிகளும் சிக்கியிருக்கின்றனர். இதைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டிருக்கிறது.

Story first published: Friday, May 17, 2013, 18:20 [IST]
Other articles published on May 17, 2013
English summary
Stung by the sensational IPL spot-fixing scandal, the BCCI has called an Emergent Working Committee meeting on Sunday to discuss the "fallout" of the controversy that has tarnished the credibility of the cash-rich league.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+