
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வியை இந்திய அணி சந்தித்ததைத் தொடர்ந்து கேப்டன் டோணியை நீக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் அதிகரித்து வருகிறது.
டோணியை நீக்க வேண்டும் என்று முன்னாள் தேர்வுக் குழுத் தலைவரான ஸ்ரீகாந்த் கூறியிருந்தார். அதேபோல் சுனில் கவாஸ்கரும் டோணியை நீக்கிவிட்டு கோஹ்லியை கேப்டனாக நியமிக்கலாம் என்று கோரியிருந்தார். இப்போது முன்னாள் வீரர் பிஷன்சிங் பேடியும் இதில் இணைந்திருக்கிறார்.
இது தொடர்பாக பிஷன்சிங் பேடி கூறுகையில், டோணியைப் பொறுத்தவரையில் ரொம்பவும் நெகட்டிவ் சிந்தனை கொண்டவராகவே இருகிறார். குறிப்பாக பீல்டிங் விஷயத்தில் ரொம்பவும் நெகட்டிவ் சிந்தனையோடு இருக்கிறார். அவருக்குப் பதில் விராத் கோஹ்லியை கேப்டனாக நியமிக்கலாம் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
டோணிக்கு பதிலாக கோஹ்லியை கேப்டனாக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.