ஐபிஎல் 6: ரசிகர்களை பரவசப்படுத்தும் வீரர்களின் ஆடுகள நடனங்கள்
சென்னை: நடப்பு ஐபிஎல் 6வது தொடரில் உயரப் பறக்கும் சிக்சர்கள்,அடுத்தடுத்து பறக்கும் பவுண்டரிகள், மளமளவென சரியும் விக்கெட்டுகள் எப்படி துள்ளலுடன் ரசிக்கப்படுகின்றவோ அதைப் போலதான் ஆடுகளத்தில் வீரர்கள் குஷியில் ஆடும் நடனங்களும்..
ஐபிஎல் போட்டிகள் 20 ஓவர் கொண்டவை என்பதால் மொத்தம் 40 ஓவர்களும் பரபரப்பானவையாவையே. .முதல் ஓவரில் இருந்து அந்த இன்னிங்ஸின் கடைசி ஓவராகட்டும்..எதிரணியின் முதல் ஓவரில் இருந்து கடைசி ஓவராகட்டும் பரபரப்புதான்... அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் சேஸிங் பார்முக்கு வந்துவிட்டால் ஆடுகளம் அதகளம்தான்.. அதிலும் வின்னிங் ஷாட் அடிக்க பிராவோவை விட்டால் போதும்... இந்த பட்டியலில் பொல்லார்டும் அடக்கம்..
ஆடுகளத்தில் பரபரப்புகளுக்கு மத்தியில் பொதுவாக ஆனந்தக் கூத்தாடக் கூடியவர்களாக கருதப்படுகின்றனவர்கள் பிராவோவும், கெய்லும்.. அவர்கள் மேற்கிந்திய தீவுகளுக்கே உரித்தான கங்கனம் ஸ்டைல் நடனமாடக் கூடியவர்கள்..இந்த பட்டியலில் நேற்று ஹர்பஜனும் ரகளை ஆட்டம் போட்டார்...

பிராவோவின் 'CHAKA CHAKA
பிராவோவின் 'CHAKA CHAKA' ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான பெரிய சேசிங்...185 ரன்களை எடுத்தாக வேண்டிய நிலையில் களமிறங்கிய சென்னை அணியின் கடைசி ஓவரில் பிராவோ ஒரு அற்புத சிக்சர் அடித்து வெற்றிக்கு வித்திட்டாரே பார்க்கலாம்..அப்புறம் வின்னிங் ஷாட்டையும் அடித்துவிட்டு ஆடுகளத்தில் அதகள ஆட்டம் போட்டார்.அதன் பெயர் 'CHAKA CHAKA' என்றார் அவரே...

பிராவோ -ஹோல்டர்
மற்றொரு மேற்கிந்திய தீவு வீரரான ஹோல்டரிடம் தமது பாணி விளையாட்டை 'வெளிப்படுத்துகிற' பிராவோ...

கெய்ல் கங்கனம் ஸ்டைல்
கெய்ல் கங்கனம் ஸ்டைல் ஆடுகளத்தில் மட்டுமின்றி.. பொதுவாக மும்பை ராயல் சேலஞ்சர்ஸ் அணியினர் அத்தனை பேரையும் கங்கனம் ஸ்டைல் ஆட்டம் போட கங்கனம் கட்டிக் கொண்டு ஆடுகிறார் கெய்ல்..தில்ஷான், முரளீதரன் ஆகிய சகாக்களுடன் கெய்ல்.. இவரும் மறக்காமல் ஆடுகளத்தில் உற்சாகத்தில் ஒரு குத்தாட்டம் போட்டுவிட்டுத்தான் ஓய்வார்...

கலக்கிய ஹர்பஜன் சிங்
கலக்கிய ஹர்பஜன் சிங் மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் கெய்ல் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஹர்பஜன்சிங் சிறிது நேரம் போட்ட பஞ்சாபி கங்கனம் ஸ்டைல் ஆட்டம் சக வீரர்களை மட்டுமின்றி ரசிகர்களையும் துள்ள வைத்தது.. கடைசி தருணங்கள் ஆண், பெண் அனைத்து தரப்பு ரசிகர்களுமே ஹர்ஜபனை நோக்கி அவரது பாணியிலேயே டான்ஸ் ஆட அவ்ளோ வெட்கம்.. முகத்தையே மனுசர் மூடிக் கொண்டார்...

பொல்லார்டு டான்ஸ்
இதே பட்டியலில் இணைந்திருப்பவர் பொல்லார்டு... அவரும் தமக்கே உரித்தான நடனத்தை வெளிப்படுத்தி அவ்வப்போது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடுகிறார்.


Click it and Unblock the Notifications