'மொடா' குடிகாரனாக்கியது ஹர்பஜன் தான்-சைமண்ட்ஸ்

கடந்த 2008ம் ஆண்டு ஜனவரியில் இந்திய அணி ஆஸ்திரேயாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது சிட்னி டெஸ்டின் போது இந்திய வீரர் ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலியாவின் சைமண்ட்சை குரங்கு என திட்டியதாக புகார் தெரிவிக்கப்ப்டடது. இதையடுத்து ஹர்பஜனுக்கு மூன்று போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த பிரச்சனையை விசாரித்த ஐசிசி ஹர்பஜனை நிரபராதி என கூறி அவரை விடுவித்தது. ஹர்பஜன் விடுவிக்கப்பட்டது சைமண்ட்சுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இதையடுத்து அவர் கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் ஆஸ்திரேலிய போர்டு தனக்கு நியாயம் வழங்க உதவவில்லை எனவும் அவர் நினைக்கிறார். இதன் காரணமாக அவர் கடந்த ஆண்டு நடந்த வங்கதேசத்துக்கு எதிரான தொடரின் போது அணி கூட்டத்தை புறக்கணித்துவிட்டு மீன் பிடிக்க சென்றுவிட்டார். இதனால் அவர் அத்தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் ஒரு வழியாக அணியில் இடம்பிடித்தார். சமீபத்தில் முடிந்த டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் விளையாட இங்கிலாந்து வந்தார். ஆனால், ஓவராக குடித்துவிட்டு ஆட்டம் போட்டதால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவரால் தற்போது அவரது குடிபழக்கத்தை நிறுத்த முடியவில்லை. மொடா குடிகாரனாகிவிட்டதாக அவரே ஒத்து கொள்கிறார்.
அவர் கூறுகையில், ஹர்பஜன் என் மீது இனவெறி தூண்டும் விதமாக பேசியது தான் நான் குடிகாரனாவதற்கு காரணம். இதனால் ரசிகர்களின் மத்தியில் எனது புகழை இழந்து வருகிறேன் என்றார்.
அவரது பெண் நண்பி கேதி ஜான்சன் கூறுகையில், அவர் பயங்கர கோபத்தில் இருக்கிறார். சிலரால் அவர் காயப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் தான் அவர் பயங்கர குடிகாரராகிவிட்டார் என நினைக்கிறேன்.
அவர் அதிகமாக குடிப்பதால், அதிகமாக கோப்படுகிறார். இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார். குடிகாரனாகிவிட்டீர்கள் என அவரிடம் பலமுறை கூறிவிட்டேன் என்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications