Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென் ஆப்பிரிக்காவை திராட்டில் விட்ட டிராட்... இறுதிப் போட்டியில் இங்கிலாந்து

லண்டன்: தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கி அருமையாக ஆடிய ஜோனதன் டிராட்டின் சிறப்பான ஆட்டம் காரணமாகவும், இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சு காரணமாகவும் அந்த அணி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

ஓவல் மைதானத்தில் நேற்று இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான சாம்பியன்ஸ் டிராபி முதலாவது அரை இறுதிப் போட்டி நடைபெற்றது.

மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

முதலில் ஆடி 175

முதலில் ஆடி 175

முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 175 ரன்களில் நின்று போனது.

பின்னர் பிரமாதமாக ஆடிய இங்கிலாந்து

பின்னர் பிரமாதமாக ஆடிய இங்கிலாந்து

இதையடுத்து 176 ரன்களை மெதுவாக துரத்தத் தொடங்கிய இங்கிலாந்து வீரர்களை சீர்குலைக்க தென் ஆப்பிரிக்கா கடுமையாக முயன்றும் முடியவில்லை.

ஆட்டம் காட்டிய டிராட்

ஆட்டம் காட்டிய டிராட்

இங்கிலாந்து வீரர் ஜோனதன் டிராட் மிகச் சிறப்பாக ஆடினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல், 84 பந்துகளில் 82 ரன்களை அவர் குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும் அடக்கம்.

ரூட்டுக்கு 48

ரூட்டுக்கு 48

அதேபோல ஜோ ரூட்டும், டிராட்டுடன் துணை நின்று 48 ரன்களைச் சேர்த்தார்.

37.3 ஓவர்களிலேயே முடிஞ்சு போச்சு

37.3 ஓவர்களிலேயே முடிஞ்சு போச்சு

மிகவும் செளகரியமாக ஆடி வந்த இங்கிலாந்து அணி 37.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி ரசிகர்களை குஷிப்படுத்தியது.

இறுதிப் போட்டியில்

இறுதிப் போட்டியில்

இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள இங்கிலாந்து, இன்று நடைபெறும் 2வது அரை இறுதியில் வெல்லும் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதும்.

2வது முறையாக இறுதிப் போட்டி

2வது முறையாக இறுதிப் போட்டி

2வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து முன்னேறியுள்ளது. முன்பு 2004ம் ஆண்டு அது இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இன்று 2வது அரை இறுதி

இன்று 2வது அரை இறுதி

இன்று கார்டிப் மைதானத்தில் இந்தியா, இலங்கை அணிகள் 2வது அரை இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளன.

Story first published: Thursday, June 20, 2013, 18:27 [IST]
Other articles published on Jun 20, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+