மீண்டும் பணிக்குத் திரும்பும் ஸ்டீவ் பக்னர்
சிட்னி: கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த இந்திய- ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கொடுத்த தவறான தீர்ப்புகளால் பெரும் கண்டனத்துக்கு ஆளாகி ஐசிசி நடுவர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருந்த மேற்கு இந்தியத் தீவுகள் நடுவர் ஸ்டீவ் பக்னர் மீண்டும் நடுவர் பணிக்குத் திரும்புகிறார்.
கடந்த 11 மாதங்களாக நடுவர் பணியில் ஈடுபடாமல் இருந்து வந்த ஸ்டீவ் பக்னர், நவம்பர் 20ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் நடுவராகப் பணியாற்றவுள்ளார்.
இந்தத் தொடரில் இரு டெஸ்ட் போட்டிகள் இடம் பெறுகின்றன. இதில் பக்னரும், இன்னொரு மேற்கு இந்தியத் தீவுகள் நடுவரான பில்லி டாக்ட்ரோவும் நடுவர்களாகப் பணியாற்றுவார்கள் என ஐசிசி அறிவித்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:14 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications