Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசிப் போட்டியிலாவது இந்தியா வெல்லுமா?


மும்பை:

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 7வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மும்பையில் இன்று பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

MahendraSingh Dhoniஇந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி இந்திய அணியுடன் 7 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 4 போட்டிகளில் அபாரமாக வென்று தொடரை வென்று விட்டது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்தியாவுக்கு ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

ஆஸ்திரேலிய அணியைப் போல இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து ஆடாததால், இந்தியாவுக்கு வெற்றி எட்டாக் கனியாக மாறி விட்டது.

இந்த நிலையில் இன்று 7வது மற்றும் கடைசிப் போட்டி மும்பையில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இப்போட்டியில் வென்று ஆறுதல் பெறுவோமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால் இந்திய ரசிகர்களுக்கு கடுப்பேற்றும் வகையில், இப்போட்டியையும் விட மாட்டோம், வெல்வோம் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ரிக்கி பான்டிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இன்றைய போட்டியில் ராகுல் டிராவிட் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. அவருக்குப் பதில் தமிழகத்தைச் சேர்ந்த பத்ரிநாத் அல்லது ரோஹித் சர்மா ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்படக் கூடும் என்று தெரிகிறது.

மும்பையில் மாலையில் தற்போது பனி நிலவுவதால், 2வது பேட்டிங் எடுக்கும் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். எனவே இன்றைய போட்டியில் இந்தியா 2வதாக பேட்டிங்கை எடுத்தால் வெற்றி பெற முயலலாம்.

ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு முன்னாள் எந்த ரெக்கார்டுகளும், ெதாழில்நுட்ப சாதகங்களும் எடுபடுவதில்லை என்பது கண்கூடு. எனவே, முழு பலத்தையும் திரட்டி இந்திய வீரர்கள் விளையாடினால்தான் ஆறுதல் வெற்றியைப் பெற்று இந்திய ரசிகர்களின் அதிருப்தியை நீக்க முடியும்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:30 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+