Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பக்னர் நீக்கம் இல்லை: ஐசிசி பல்டி

Bucknor

துபாய்: நடுவர் ஸ்டீவ் பக்னர் விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அவரை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை. பெரத் டெஸ்ட் போட்டியில் அவர்தான் நடுவராக பணியாற்றுவார் என்று ஐசிசி திடீரென அறிவித்துள்ளது.

பெரும் சர்ச்சைைய ஏற்படுத்தியுள்ள ஸ்டீவ் பக்னர் மீதமுள்ள போட்டிகளில் இடம் பெறக் கூடாது. அப்படி அவர் இடம் பெற்றால் தொடரிலிருந்து இந்தியா விலக நேரிடும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.

பக்னரை நீக்கக் கோரியும் முறைப்படி மனு அளிக்கப்பட்டது. இதனால் பெர்த் நகரில் நடைபெறவுள்ள 3வது டெஸ்ட் போட்டியில் பக்னர் இடம் பெற மாட்டார் என ஐசிசி தெரிவித்ததாக முதலில் செய்திகள் வெளியாகின.

ஆனால் இப்போது திடீரென பக்னரை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிசி தகவல் தொடர்பு மேலாளர் சமி உல் ஹசன் கூறுகையில், பக்னரை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை. அவர் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

பக்னர் நீக்கப்படாத வரையில், பெர்த் போட்டியில் அவர்தான் நடுவர். அதில் மாற்றம் இல்லை என்று கூறியுள்ளார் ஹசன்.

ஐசிசியின் இந்த திடீர் அறிவிப்பால் கிரிக்கெட் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:35 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+